பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் தமிழ்ப் பணியும் அதனினின்றும் பெயர ஒண்ணாமைபற்றி எழுந்த தொன்றாம். சைவ நூல்களை முறைப்படுத்திய நம்பி யாண்டார் நம்பிகள் என்னும் புவவர் பெருமான் இறை வனையடைந்து பேரின்பம் துய்த்தற்கு வாயிலாகவுள்ள அறிவுமொழி இத் தமிழ்மொழியெனக் கண்டு அக் காட்சியைத் திருஞான சம்பந்தப் பிள்ளையார் பெருமை கூறுமுகமாக, ஆறதே றுஞ்சடை யான்அருள் மேவ அவனியர்க்கு. வீறதே றுந்தமி ழால்வழி கண்டவன் 15. என்று வெளியிட்டருளினார். 'சிவபிரானது திருவருட் பேற்றையடைய உலகத்தவர்க்குத் தமிழால் வழிகண்ட வர்' என்னும் இதனால் இது ஞானமொழி என்பதில் ஒரு சிறிதும் ஐயமின்றாம். ஈண்டுத் தமிழைச் சுட்டுங் கால் "வீறதேறுந் தமிழ்" என்றார். வீறு என்னுஞ் சொல் 'வேறென்றற் கில்லா அழகு' என்னும் பொருள தாம். இப்பொருள் சீவக சிந்தாமணியில் "வீறுயர் கலசநன்னீர்" என்புழி நச்சினார்க்கினியர் கண்டதாகும்.. வேற்று மொழிகட்கில்லாச் சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல் முதலிய அழகுகள் இத்தமிழ் மொழிக் கண் மலிந்திருத்தலின், இச் சொற்பொருள் நச்சினார்க் கினியர் கண்ட அவ்விடத்தினும் இங்கு மிகவும் இயை புடைத்தென்பது நன்கு விளங்கும். இச்செந்தமிழ் மொழியாம் நறுநீர்த் தடாகத்திற் பற்பல கிளை நூல்களாம் கொடி, இலை, அரும்பு, மலர் முதலியன கிளைத்தெழுதற்கு முதலாகவுள்ளதும், மொழியின் தன்மையை வரம்பிட்டு உரைக்கும் இயல் முதல் நூலுமாகிய தொல்காப்பியம் என்னும் மூலமும்,