பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 உரைநடைக் கோவை அதன்கட்டோன்றி எழில்பெற விளங்குவதும், இன் னும் காலக்கூறு எத்துணை கழியினும் உலகநிலையும் மக்கள் ஒழுகலாறும் இன்ன படியாக இருத்தல் வேண்டுமென்று புதிய புதிய எண்ணங்களை மேற் கொண்டு ஆராய்வார்க்கெல்லாம் சிந்தாமணிபோல் நீதிப்பொருள்களை வழங்குவதும், நுண்பொருளாம் நறு மணம் மிக்கதுமாகிய பீடுசால் திருக்குறள் என்னும் தாமரை மலரும் அம்மலர்க் கண்ணே ததும்பி வழி வதும், விலை வரம்பில்லா மாணிக்கம்போன்ற சொன் மணிகளானும் உள்நோக்கி உளம் நெகிழ்ந்து ஆராய் வார்க்கு "எனை நான் என்பதறியேன் " என்றபடி அவர் தம் நிலையும் மறக்கச் செய்யும் பொருளொளி களானும், கல்லையுங் கரைக்கும் இசை நலத்தானுஞ் சிறந்து திகழ்வதும், படித்தல் கேட்டல் முகமாகத் தன்னை யுண்பாரைத் தான் உண்டு அன்புருவாக்கிச் சிவநெறிக்கட் செலுத்திப் பேரின்பப் பெருவாழ்வுறுத்து வதும் ஆகிய திருவாசகம் என்னும் தேனும் கைவரப் பெற்ற தமிழ்ச் செல்வர்க்கு யாதுங் குறையின்றெனி னும், கால வேறு பாட்டால் உள்ள நிலை வேறுபட்டு அதனால் விளையுங் குறைகட்கு அவர் இடனாதல் வருந்தத்தக்கதே. 37 அக் குறைகளாவன:-- நஞ்செந்தமிழ்த் தெய்வ மொழிக்கு இயல்பின் அமைந்த மாட்சிமைகளை விளக்கமாக உணர்ந்து உலகினர்க்கும் உணர்த்தித் தாமும் பயன் எய்துதலை விட்டு, இதற்கில்லாதனவும் வேண்டாதனவுமாகிய சிலவற்றைச்சிறப்பெனக் கண்டு இதற்கு ஏறிட முயன்று இடர்ப்படுதலும் இன்னோரன்ன