பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் தமிழ்ப் பணியும் ஆங்கில மொழிப் பயிற்சியால் உயர்தரப் பட்டம் பெற்றாருட் சிலர் தமிழையுங் கடைக்கணித்து ஒரு சிறிது பயின்றதும், வேற்றுமொழியால் தாம் எய்திய பெருமையை இதன் முகமாக வெளிப்படுத்த எண் ணிப், பண்டையோர் சிறந்த முறையில் ஆராய்ந் தெழு திய நூலுரைகளைக் குறைகூறத் தலைப்பட்டுத் தங் குறையை வெளிப்படுத்துகின்றனர். அவர் குறை, அறிவுடையாருட் சிலர்க்கன்றி ஏனையோர்க்குப் புலப் படாததாகலின், அவ் வேனையோர் மலிந்த இவ்வுலகத் தாராற் பாராட்டப்படும் பேறுபெற்று மீண்டும் மீண் டும் அவர், தம் இயற்கையை வெளிப்படுத்த முயல் கின்றனர். ஒரு நூலையோ உரையையோ ஒருவர் மறுக்க எண்ணுவராயின், அந்நூலுரைகளின் பொருள்களை ஆசிரியரின் கருத்தின் வழி முதலில் அறிதல் வேண்டு மன்றோ? அங்ஙனம் அறிதலில் தம் உழைப்பைப் பயன்படுத்தாமல் மறுத்துரைக்க விரைவார் செயலை என்னென்பேன்! வைரமணியின் தூய வெண்ணிற வொளியை மஞ்சள் நிறமென மாறு படக் கண்டு அக்காட்சி ஏதுவாக 'இது வைரமணி அன்'றென ஒருவன் கூறுவானாயின், அஃது அவன் கண்ணின் குற்றத்தா லாயதன்றி வேறென்ன? சிலர் வேறு வழியில் தாம் உயர்ந்த நிலையை அடைந்திருப்பதாக எண்ணித், தமிழிலும் தம் புலமை முற்றுப் பெற்றதாக உலகங்கொள்ள விழைந்து, தமிழிற் பாட்டுப் பாட முயல்கின்றனர். அந்தோ ! அவர் பாட்டை நினையுங்கால் தமிழ் மொழியாளர் செயல் இத் தகையதுபோலுமென்று பிறமொழியாளர் எள்ளி நகையாடற் கிலக்காகின்றதே என்று வருந்த 19