பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் தமிழ்ப் பணியும் உட் பொருள்களைப்பற்றி ஆங்காங்குள்ள சிற்சில குறிப் புக்களைக்கொண்டு நம் தமிழ்வல்லார் ஒரு முடிபுக்கு வருதல் சிறந்த முறையன்று. 23 இன்னும், வடமொழிக்கண்ணுள்ள அளவை நூல்களும், சுவையாராய்ச்சி நூல்களும், பெருங்காப்பி யங்களை ஆராய்வதற்குக் கருவியாகவுள்ள நூல்களும், பொருணூல்களும், அறிவு நூல்களும், பிறவும் மொழி பெயர்க்கப்படல் வேண்டும். இச் செயற்கு வடமொழி யோடு தமிழ்பயின்றார் பலர் வேண்டும். நம் தமிழ்மொழியின் ஆக்கத்திற்கு ஒருதலையாக வேண்டுவனவற்றுள் இம் மொழிபெயர்ப்புச் செயலும் ஒன்றாம். இதுபற்றியே தொல்காப்பியனாரும், தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த் ததர்ப்பட யாத்தலோ டனைமர பினவே" என்று நூல் யாப்பு வகைகளுள் ஒன்றாக இம் மொழி பெயர்ப்பையும் கூறினார். இவ்வரிய காரியஞ் செய் தற்குரிய நிலையத்தை இன்னோரன்ன சங்கங்களின் உறுப்புக்களுள் ஒன்றாகக்கொண்டு பலர்கூடிச் செய்தல் வேண்டும். பல இனி, ஆராய்ச்சி, செய்யுள்,உரை நூல்களைப்பற்றி ஒரு சிறிது கூறுவேன். சிறந்த பண்டைத் தமிழ்நூல் களைச் செவ்வனம் ஆராய்ந்து அவற்றிற் பொதிந்து கிடக்கும் நுண்பொருள்களைத் தொகுத்துப் ஆராய்ச்சி நூல்கள் வெளிப்படுத்தல்வேண்டும். பெரும் புலவர்களால் அரிதில் தேடித் தொகுத்த இரத்தினக் குவியல்போன்ற பழந்தமிழ் தூல்களெல்லாம் கிளைக்கக் கிளைக்கப், புதிய புதிய சுவை கலன்களைத் தோற்றி