தமிழும் தமிழ்ப் பணியும் (2) புலவர், புரவலர், செய்யுள் முதலியன மொழி பெயர்த்தல், செய்யுள் நூல் யாத்தல், பண்டை நூல்களுக்கு விளக்கவுரை எழுதுதல், ஆராய்ச்சியுரை வரைதல் ஆகிய இன்னோரன்ன துறைக் ளெல்லாம் நம் தண்டமிழ் வளர்ச்சியுறுவதற்கு ஏற்றன வாம். இத்துறைகளிற் புலவர் பெருமக்கள் தலைப் படுதற்குத் தக்க பொருள் வருவா யிருத்தல் இன்றிய மையாத தொன்றே. இதற் கென் செயலாம்? தமிழ் நாட்டுச் செல்வர்கள் கடைக்கணித்தல் வேண்டும். இக் கரந்தைத் தமிழ்ச் சங்கம் போன்ற சங்கங்களின் வாயிலாகச் செல்வர்கள் தக்கவாறு பொருளுதவி புரிந்து, அப் புலவர் பெருமக்களைப் போற்றுதல் வேண் டும். பொருள் படைத்தவர் ஒவ்வொருவரும் தத்தம் பெயரால் ஒவ்வொரு துறைக்கும் இத்துணைப் பொருள் கொடுப்போமென முன்வந்து சங்கங்களின் வாயிலாக வெளியிட்டுப் புலவரை ஊக்குதல் வேண்டும். தமிழ் காட்டுத் தலைநகரங்களிற் குணங் குற்றங்களை ஆராய் தற்குரிய புலவர் கழகங்களை அமைத்து அக் கழகத்தார் நடுநிலை திறம்பாமல் ஆராய்ந்து மதிப்பிடும் நூலுரை முதலியவற்றிற்குத் தக்கவாறு பொருட்பரிசிலும் பட்டங்களும் வழங்கல் வேண்டும். இச் செயன்முறை பெரிதும் தமிழ்நாட்டுச் செல்வர்களைப் பொறுத்த தாகும். புலவர்க்கு வறுமை நேர்தல் பண்டுதொட்டு உள்ளதே. அதற்குக் காரணம் அவர் புலமைச் செல் வத்தைப்போற் பொருட் செல்வத்தை ஈட்ட விரு பமும், முயற்சியும், உபாயமும் மேற்கொள்ளாமையே
பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/35
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
