பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைநடைக் கோவை தோன்றுவது பிற்காலத்தில் எந்நிலையிற் செழித்து வளரும் என்பதற்கு இச்சங்கமே சான்றாகும். அவர் கள் பருவுடலை யான் அறிவேனாயினும், அவர்களுக்கு முன் தோன்றியவர்களும், சங்கத்தைக் கண்ணுங் இற்றைஞான்று கருத்துமாகப் பாதுகாத்து வருகின்றவர்களும், என் இனிய நண்பரும் ஆகிய திருவாளர் த.வே.உமாமகேசுவரம் பிள்ளையவர் களின் உயர்ந்த குணஞ்செயல்களே அவர்க்கு இளையாரின் நிலையையும் இற்றென்று கிளப்பனவாம். அவர் நுண்ணுடம்பை நம் அகக்கண் கண்டு களிக்கின் றது. அந் நல்லவ ருள்ளத்திற் பதிந்து வெளிப்பட்ட இக் கல்விக் கழகம் நாடோறும் திங்கடோறும் ஆண்டு தோறும் புதிய புதிய திருத்தங்களை மேற்கொண்டு, பற்பல அரிய தமிழ்ப்பணிகளை இயற்றி வருகின்றது. இது 'பெத்தாச்சி புகழ் நிலையம்' என்னும் சுவடி நிலையம், கைத்தொழிற் செந்தமிழ்க் கல்லூரி, திங்கள் வெளியீடு முதலியவற்றைத் தன் உறுப்புக்களாகக் கொண்டு எல்லா நலன்களும் ஒருங்கமைந்த தலைவரைப் பெற்றுத், தான் செய்யவேண்டிய செயல்களைச் செவ் வன் ஆற்றி வருகின்றது; நூற்றுக்கணக்கான மாணவர் களுக்குத் திருந்திய முறையிற் கின்றது. இக் கழகத்தினின்றுந் திங்கள் தான் யீடாகத் தோன்றிய தமிழ்ப் பொழிலோ தோன்றிய சில திங்களுள் தமிழன்பர்களின் உள்ளத் தைக் குளிர்விக்கும் உள்ளுறையாந் தண்ணிய நிழலை யும், அரும்பொருண் மணமிக்க வேற்றுமொழி விரவாத் தண்டமிழ்ச் சொற்றிரளாம் நறுமலர்த் துணர்களையும் கல்வியை ஊட்டு வெளி