பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் தமிழ்ப் பணியும் விரைவில் நிலைபெறச் செய்தல் வேண்டுமென்பதூஉம், தமிழ்ப் பள்ளிகளில் மொழிப் பயிற்சியோடு சமய நூற் பயிற்சியும் மாணவர்க்கு வேண்டுமென்பதூஉம், இக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மேம்பாடும் இதற்கு. வேண்டுவனவும் இன்னவென்பதூஉம், தமிழ் நாட்டுச் செல்வர்கள் தமிழ் வளர்ச்சியிற் பேருக்கமுடையராய்த் தக்கவாறு பொருளுதவி புரிந்து போற்ற வேண்டுமென் பதூஉம், திருவருள் முன்னிற்க வென்பதூஉம், பிறவுமாம். 41" இத்துணைக் காலம் என் சிற்றுரைக்குச் செவி சாய்த்துப் பொறுமை யணியை மேற்கொண்டு விளங்கும் பெரியீராகிய நுங்கள் நன்றியை நினைவுட் கொண்டு, என் உளமார்ந்த வணக்கத்தை நுமக்கு. உரிமைப்படுத்துகின்றேன். போற்றுந் தமிழும் புலவரும் வாழ்கநலஞ் சாற்றுங் கரந்தைத்?தமிழ்ச்சங்கம் - ஏற்றமொடு பல்லாண்டு வாழ்க அருள் பாலித் ததுபுரக்கும் எல்லோரும் வாழ்க இனிது.