பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. தமிழ்ப் புலமை* ! அன்பர்களே பண்டைக் இங்குத் திறந்துவைக்கப் பெறுவது தமிழ்ப்புலவர் மாநாடாகும். நம் அமிழ்தினுமினிய தமிழ் மொழி காலத்தில் இற்றை ஞான்றினும் எத் துணையோ பன்மடங்கு அகன்ற நிலப்பரப்பைத் தனக் குரியதாகக் கொண்டு விளங்கிய தென்பதும், குமரி யொடு வட விமயத் தொருமொழி வைத்துலகாண்ட சேரலாதனால் குமரிமுனை தொட்டு இமயமலை வரையும் இறை மொழியாக வழங்கப் பெற்ற தென்பதும், தொன்மையில் தனக்கு நிகராக இக்காலத்துவழங்கும். மொழிகளில் மிகச் சிலவன்றி இல்லையெனத் தக்க நிலையில் உள்ள தென்பதும் நீவிர் நன்றுணர்வீர்கள். ஆதலின், இவை பற்றி யான் விரித்தல் வேண்டா வென நினைக்கின்றேன். செப்பமிக்க இயலமைப்பும், அவ்விலக்கணங்களுள் வேறு எம்மொழிக்கும் இல்லாது தனக்கெனச் சிறப்பு துறையூரில் (6-8-1982) கூடிய -தஞ்சை மாகாணத் நிகழ்த்திய திறப்புரை 24 திருச்சிராப்பள்ளி தமிழ்ப் புலவர் மாநாட்டில்