பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 உரைநடைக் கோவை வீழ்ச்சி போற் சேய்மையினின்றே முடிபொருட்குரிய சார்வுப் பொருள்களில் மெல்ல மெல்லத் தலைப்பட்டுச் செல்லுவன். அச்செலவின் நிலையை அந்நெறி நின்றே உய்த்துணர்தல் வேண்டும். செல்வழிக்கட் கண்டனவே தீர்ந்த பொருளென எண்ணிவிடலாகாது. நூலுரையாசிரியர்களின் கருத்துப் படர்ச்சியில் நம் அறிவுத் தொடர்ச்சி பின்னிடுதல் நன்றன்று. அயரா உழைப்பிற்கு அகப்படாத அரும்பொருள் யாதுமின்று. தொடர் நிலைச் செய்யுட்களின் உயிரனைய சுவைநலம் விராய குறிப்புப் பொருளை உணர்தலில் நம் அவா முற்படவேண்டும். சுவை நலங் கலந்த அத் தொனிப் பொருள் தங்குதற்குரிய இடனமையாப் பாடல்கள் உயிரற்ற வெற்றுடல் போல்வனவாம். வெற்றுடலை அணிகலன் புனைந்து காண்டல் பின்னர்க்காணலாகாத இறுதிக் காட்சியாக முடியுமென்பது அறிந்ததொன்றே; அங்ஙனமே சுவைநல மளைந்த தொனிப்பொருள் விரவாப் பாடல்களை அணிநல னளவிற் காண்டல், மீண்டுங் காண வேண்டும் என்ற விழைவற்ற நிலையில் நிகழ் தொன்றாகும். மதிவலி மிக்க தோன்றிய பாடல் நங்கைக்கு, புலவனிடத்தினின்றும் திட்ப நுட்பம். தெளிவு, விளக்கம், இனி மை முதலிய பண்புகளமைந்த சொற்பொருட்குழுவே அழகிய உடலும், சுவைநலந் துறுமும் தொனிப் பொருளே உயிருமாம். இந் நங்கைக்கு உவமை முதலிய அணிகளே அணி கலன்களாம் அழகுக்கு அழகு செய்தல் போல இவ் வணிகள் சேர்க்கப்படினும், இப் பாடன் மெல்லியற் பாவை நல்லாளின் இயற்கை வனப்பு மிக்க நல்லுடலைச்