பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ப் புலமை சார்ந்து உவமை முதலிய அணிகளே சிறந்த அழகு பெற்றுத் திதழ்வனவாம். இங்ஙனம் இயற்கை நலம் மிக்குச் செயற்கை நலனையுமேற்றுத் திகழும் இத்தகைய பாடல் நங்கை யைக் கூடி நுகர்தற்குரிய இளநலஞ் சான்ற மணமக னியலபை இயம்பவும் வேண்டுங்கொல்! அன்னான் இலக்கிய நூலறிவானும் மதி நூட்பத்தானுஞ் சிறந்து மலர்ந்து மணப்பருவம் வாய்க்கப் பெற்று, கட்டழகு வாய்ந்த பாடல் நங்கையைக் காண்டலிற் காதல் மிக்குடையனாய் அப்பேறு குறித்துத் தவம் புரிந்த தனிப்பெருஞ் செல்வனாதல் வேண்டும். வேட்கை முயற்சியும் தவப் பயனாம் ஆகூழ்வலியும் ஒருங்கு கைவரப் பெற்றாலன்றி, அப்பாடல் நங்கையின் பரிசுணர்தல் அரிதாகும். இன்ன பாடல் நங்கையைப் பண்புடன் வேட்ட காதற் கொழுநனாங் கலைவல மணமகன், அந் நங்கை நலனெலாம் நன்னர் நுகர்ந்து புலநிரம் பின்பம் பொருந்திய வாழ்க்கையிற் றலைப்படுங்கால்,அவ் விரு வர்தம் இரண்டற்ற தன்மையினெழுந்த இன்பநிலையே உருவெடுத்தாங்கு மழவிளம்பாடற் குழவிகள் தோன் றும். இந்நன்மக்கட் பேற்றினையுடைய நன்புல இல் லற வாழ்க்கையிற் றலைப்பட்டு நிரம்பினோரே உண்மைப் புலவராவர். கண் முதலிய அறிவுக் கருவிகளாற் காண்டற் கியலாத நுண்பொருள்களை யெல்லாம் நுண்மாணுழை புலமாகிய உட்கருவியாற் செய்யுளுலகத்திற் 'கண்டு இன்புறுதல்கூடும். அவ்வளவின் அமையாது, அவ்