பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 உரைநடைக் கோவை தலில் வேட்கையுடையராகக் காணப்பட்டிலர். ஆசிரி யனை அடுத்துக் கற்றது அவன் தன் புலமையள விற் காற்கூறாம் அத்துணையே யல்லது, முற்றும் நிரம்பி யதாகா தென்பது நம் பெரியார் கண்ட உண்மை. காணாதனவெல்லாங் காண்டற்கும் கேளாதனவெல் லாங் கேட்டற்கும் அறிவுலகத்து நிகழும் வியத்தகு அருஞ் செயல்களை உணர்ந்து இன்புறுதற்கும், நிரம்பிய புலமையே சிறந்த கருவியாகும். இவ் வுயரிய நோக்கங் களை நிறைவேற்றுதற்குரிய புலமையை உடலோம்பற்கு வேண்டிய பொருளளவிற் பயன்படுத்த எண்ணுதல் பொற்கொழுக்கொண்டு வரகுக்கு உழ எண்ணுவத னோடு ஒக்கும் என்ப. சிறந்துயர்ந்த நோக்கங்களை மேற்கொண்டு திருவரு ளுணர்ச்சியிற் றலைப்படும் புலமைச் செலவம் வாய்ந்து விளங்கிய நம் பண்டைத் தமிழப் புலவர் பெருமக்களைப் பண்டைத் தமிழ் நில வேந்தர்கள் எத்துணைப் பெருமை பாராட்டிப் போற்றி யொழுகினர் என்பதற்குப் புறநானூறு முதலிய நம் அரிய தமிழ் நூல்களே தக்க சான்றாக மிளிர்கின றன. தமிழ் நில மன்னர்கள் தமிழ்ப் புலவர்களைத் தம் உயிரினுஞ் சிறந்தாராக மதித் தொழுகிய சய்திகள் பற்பல உள்ளன. அம் மனனர்க்கு அரசியற் சூழ்ச்சிக் குரிய அமைச்சராகவும், அறிவுரை கூறி நன்று தீதுணர்த்தி நல்லாறறின் நிறுத்தும் ஆசிரியராகவும், அவர் குடிக்கண் உடன்றோன்றினார் முதலியவர்பாற் கலாம் விளைகாலை நடுநின்று அறவுரை கூறி, அதனைத் தீர்த்து அவரை அன்புநிலைப் படுத்தும் அக்குல முதி யோராகவும் விளங்கினார் நம் தமிழ்ப் பெரும் புலவரே யாவர். முதுமையின் தளர்ச்சியிற் கதுமென நேரும்