பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ப் புலமை காத இறப்பு முதலியவை பற்றிய அச்சம் நிகழா வண்ணம் உடல் இளமை பொருள் முதலியவற்றின் நிலையாமை களை நெஞ்சத்திற் பதியுமாறு எடுத்துரைத்து மெய் யுணர்விற் றலைப்படுத்தும் அறவோராகவும், லிகந்து கைவிடப்பட்ட கற்பரசியரை அவர்தங் கண் வரோ டியைத்து நீதிபல கூறி நெறிபிறழா வண்ணம் வாழ்க்கை நிலைப்படுத்தும் நல்லுறவினராகவும் விளங் கிய பெருமை நம் தமிழ்ப் புலவர்பாலதேயாம். தந்தை தாயார் முதலியோரை இழந்து வருந்தும் இளம்பருவத் துப் பெண்மக்கட்கு அத் தந்தை தாயார் முதலிய உறவாக நின்று நீதி வழாத நிலையிற் பாதுகாத்து நட்புக்கட னாற்றிய பெரியோரும் புலனழுக்கற்ற நம் தமிழ்ப் புலவர் பெருமானே யாவர். புணர்ச்சி பழகுத் லின்றி உணர்ச்சி வாயிலாகவே நட்பு முதிரப் பெற்றும் அநநட்டார்க்கு இறுதி நேர்ந்துழி அதனைத் தம் உணர்ச்சிச் சிறப்பான் இயல்பில் தெரிந்து தம் உயிரை யும் உடன் உய்தது அன்புக்கட னாற்றிய ஆன்ற விந்தடங்கிய கொள்கைச் சான்றோரும் நம் தமிழ்ப் புலவரே யாவர். இங்ஙனம் அரசர்பாற் புலவரும், புலவர்பால் அரசரும் அன்பு வழிப்பட்டு ஒழுகிய சிறந்த வரலாற்றுப் பகுதிகள் பலவாம். தன்னைப் பாடிவந்த ஒரு புலவற்கு ஏதுங் கொடுக்கும் நிலையில்லாத ஒரு வள்ளல் 'தலை யினைக் கொடுபோய்த் தம்பி கைக் கொடுத்து விலை யினைப் பெறுக' எனச் சொல்லியதும், அவ்வள்ளற் பெருமான் உள்ளமறிந்த புலவர் பெருமான், 'மறுப்பே னாயின் மற்றொருவர்க்கு இங்ஙனங் கூறிக் கொடுக்க நேரின் மன்னர் பெருமானை இழக்க நேருமே என்று