பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை மேனாட்டுப் புலவர் பெருமக்கள் தாம் ஒரு காலத்து ஓரிடத்து. ஆற்றும் சொற்பொழிவினை எக் காலத்தும் எல்லா மக்களும் படித்துப் பயன் பெற நூல் வடிவில் கொணர்ந்து உலகிற்குதவி உநு புகழ் பெறுகின்றனர். அங்ஙனம் உதவிய அறிஞரில் ஜான் ரஸ்கின் (John Ruskin) என் பாரும் ஒருவர். அப்போறிவாளர் 'மன்னவர் நிதியும் மங்கையர் மாண்பும்' என்னும் பொருள் பற்றி நிகழ்த்திய இரண்டு சொற்பொழிவுகள், பின்னர் Sesame and Lilies என்னும் தலைப்புடன் நூல் வடிவில் வெளிவந்து அறிஞர் நுகரும் ஆரமுதெனத் திகழ்வதை ஆங்கில அறிஞர் அனைவரும் அறிவர். அம் முறையில் வெளிவந்துள்ள உவீர நடைக்கோவை என்னும் இந் நூல். முதுபெரும் புலவர் மகாமகோபாத்தியாய பண்டித மணி மு. கதிரேசச் செட்டியார் அவர்கள் பற்பல இடங்களில் நிகழ்த் திய சொற்பொழிவுகளின் கோவையாய் அன்னா ரால் இரண்டு பகுதிகளாகத் தொகுக்கப்பட்ட வற்றுள் இரண்டாம் பகுதியாகும். இதன்கண் காந்ததைத் தமிழ்ச் சங்கம், துறையூர் தமிழ்ப் புலவர் மாநாடு. சென்னைக் குறுக்கு தாகை மாநாடு என்னும் 10 மூன்றுபேரவைகளிலும் முறையே நிகழ்த்திய தலைமைப் பேருரைகளாகிய தமிழும் தமிழ்ப் பணியும், தமிழ்ப் புலமை, .