பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைநடைக் கோவை அஞ்சி, அத்தலை தன் உடைமை எனவும், அதனை யான் வேண்டுங்காற் பெறுவே' னெனவும், 'பெருங் காறும் யார்க்கும் இதைக் கொடுத்தலாகாது' எனவுங் கூறி, அவ்வளவோடு பகைஞனாகிய தம்பியின் மனத் தைக் குழைவித்து அன்புரிமைப் படுத்து ஒன்றுபடச் செய்து இன்புற்றதும் நினையுங்கால், செந்நெறிப் படரும் மன்னவருள்ளமும், சொன்னெறிப் புலவர்தூய உள்ள மும் எத்துணைச் சிறந்துயர்ந்த நிலையில் உள்ளன என்பது நன்கு புலனாகும். இந் நிகழ்ச்சி அறிவுடையா ரகத்தை உருக்கும் பான்மைய தென்பதை யாவரும் உணர்வர். புலனழுக்கற்ற தூய பெரும் புலவர்களையும் அருண்மிகு நெஞ்சத்தினராகிய புலவர்களையும் இரு கண்ணெனப் பெற்றுத் திகழ்ந்த நம் தமிழ் நிலம் இற்றை ஞான்று ஒற்றைக் கண்ணிழந்து மற்றொரு கண்ணும் ஒளி நலங் குன்றப் பெற்று ஒடுங்கிக் கிடத் தலை உன்னுங்கால், எத்தகைய தமிழ் மனிதனும் வருந்தாமலிருக்க முடியாது. முற் பண்டை அரசர்பாற் புலவர் பெற்ற பரிசிலை உன்னுங்கால் அது மிக்க வியப்பைத் தருவதாகும். நூறாயிரக் கணக்கான பொற்காசுகளையும், றூட்டாகப் பல நிலத் தொகுதிகளையும், விலையுயர்ந்த ஆடை அணிகலன்களையும், யானை தேர் முதலியவை களையும் வரையாது வழங்கப் பெற்று மகிழ்கூர்ந்த செய்தியைப் பண்டை நூல்களான் உணர்தலோடு, இன்னும் அப் பரிசில் நிலங்களைப் பற்றிய ஆவணங் களானும் அப்புலவர் வழித்தோன்றல்களின் ஆட்சி யானும் கண்கூடாகவுங் காண்கின்றோம்.