பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைகடைத் கோவை என்னும் நம் புலமையின் விழுமிய நோக்கத்தைத் தளர விடாது மேற்கொள்ளுவோமாயின், நம்மைப் புரத்தற் குப் புரவலரும் கடவுளரும் நம் பக்கலில் தாமே அணுகித் தம் கடமையைப் புரிய முற்படுவர். இவ் வுண்மையை நம் புலவர் பெருமக்கள் உறுதியாகக் கடைப் பிடித்தல் வேண்டும். 3. தவிர்தற் குரியன இனிப் பழங்கதை பேசிக்கொண்டிருத்தலிற் பய னின்று. செய்வன இன்ன, தவிர்வன இன்ன என்னுஞ் சூழ்ச்சியிற் றலைப்பட்டு நல்லன காண்டலும் அவற் றைத் தாழாது செயலின் மேற்கோடலும் வேண்டும். விலக்கியன ஒழிதலும் அறமென்ப வாகலின், முதலில் நம் புலவர் பெருமக்கள் தம் வாழ்ககையில் தீயகுணஞ் செயல்கள் நெருங்க இடந்தராமல் அவற்றைக் களைதல் வேண்டும். தீயன களைந்தாலன்றி நல்லன செய்தற்கு டன மைதல் அரிது. தவிர்வனவற்றுள் ஒரு சிலவற்றை ஈங்குக் குறிப் பிடல் மிகையாகா தென்றெண்ணுகிறேன். ஒருவரை யொருவர் புறங்கூறல், இல்லன கூறி எள்ளி நகை யாடல், தம் அறிவினும் மற்றையோ ரறிவு தாழ்ந்த தென வாய்ப்பறை யறைதல், ஆகூழால் ஒருவர்க்குக் கிடைக்கும் ஊதியங்கண்டு நெஞ்சய் புழுங்கல், பிறர் அறிவிற் கண்டுரைத்த சுவைகலமிக்க சொற் பொருள் நலங்களைக் கேட்டுணர்ந்து உவகை யுறாமை, ஒருகால் தம் புலமை யுள்ளம் தம்மை அறியாது உவகையுறத் தொடங்கின், அதனைச் சினந்து மேலெழ விடாது அடக்கி விடுதல், மொழியறிவுத் துறையில் தரம்