பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைநடைக் கோவை இருப்பிற் களைதல் வேண்டும் என்பதை நினைவுறுத் தற்குக் கூறியரேயன்றிப் புலவரெல்லோரும் இத் தீய குணஞ் செயல்கள் உடையரெனக் கொண்டு கூறிய தன்று. ஒரு பிழையு மில்லாத தூய தன்மை கடவு ளிடத்தன்றி மக்களுட் காண்டலரிது. ஆயினும் மக்கட் பொதுவாக உள்ள பிழைகளைப் புலமைச் சிறப பாற் களைதற்கு முற்பட வேண்டுவதே புலமைப் பேற்றின் கடமையாகும். 56 ஓராராய்ச்சியில் ஒரு காலத்தில் தமக்குக் கிடைத்த. சான்றுகளைக் கொண்டு ஒரு வகையாக முடிக்கப்பட்ட தொன்று, பிறிதொரு காலத்திற் பிற சான்றுகளால் தவறுடைய தெனத் தாமே கண்டாதல் பிறர் கூரக் கேட்டாதல் உண்மை தெளிய வரின் அப்பொழுது தம் பிழைப்பட்ட முன்னைக் கொள்கையைக் கைவிட்டு உண்மைக் கொள்கையைத் தழீஇக் கோடலே புலமையின் சிறப்பாகும். பின்னர் எத்துணைத் திட்ப நுட்பமான சான்றுகள் முன்னர்க் கண்ட கிடைப்பினும் மாறுபட முடிவினின்றும் வேறுபடேம் உண்மை என்னுங் கொள்கை தவறுடையதாகும். நிலைகாண்டற்குப் பலவாறு சூழ்ந்து ஒரு முடிபுக்கு வருதலும், பின்னா அது தவறுடைத் தெனக் கணட வழி அதனை மாற்றிக் கோடலும் நடு நிலைப் புலமை யுடையார்க்கு இயலபேயாம். புலவரில் ஒரு சிலர் தம்மைச் சிறந்த ஆராய்ச்சி யாளரென உலகம் மதிக்கவேண்டும் என்னும் வேட்கை யுடையராய், பண்டை நூலுரை வரலாற்று முறை களில் தவறில்வழியுந் தவறுகளை ஏறிட்டுக் கூறி