பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 உரைநடைக் கோவை

…---

பெருமான் அறிவுரையை நினையுங்கால், நம் தேனினு மினிய செந்தமிழ்ச் சுவையையுணர்ந்த நாவானது ஒன்று கூற முற்படுங்கால் எவ்வளவு நடு நிலையுடன் சீர்தூக்கி யறியும் உளத்தோடு கூடி யெழவேண்டும் என்பது நன்கு புலனாம். உ கொடுக்கிலாதானைப் பாலியே என்று கூறாமையும், பிறர்க்கு இன்னல் விளைக்கும் பொய்மொழி புகலா மையும். இடரினுந் தளரினுங் கடவுட் கொள்ளை நளுக்கு மாறுபடப் பேசாமையும், நடுநிலை யிகந்து நவிலா மையும், பயனில்லன பகராமையும் ஆகிய இன்னோ ரன்ன செயல்களே நம் தமிழ்ச் சுவையுணர்ந்த நாவிற்கு உரிய வாம் என்பதை உணர்ந்து கடைப்பிடித்தல் வேண்டும். 4. செயற்குரியன யுலத்துறை முற்றிய நலத்துறையும் அன்பரீர்! இனி.நாம் செயற்பாலன இன்ன வென்பதைப் பற்றிச் சிறிது நினைவு கூர்வோம். பண்டு மிகப் பரந்த நிலப்பகுதிகளைத் தனதாகக் கொண்டிருந்த நம் பால் வாய்ப் பசுந்தமிழ், தன்னைப் புரப்பார் துணை சுருங்கி வந்தமையானும் பிற மொழிகள் அம் மொழியாளர் பேரூசகத்தால் வளர்ச்சி யெய்தித் தன் இடம சுருங்கப் பெற்றமையானும், கற்பார் நோக்கம் வரவரக் குகி வந்தமையானும், திருவருளுணர்ச்சி முதலிய உபரிய நோக்கங்கள் சிறிது சிறிதாகக் கைவிடப் பெற்று வருகின்றமையானும். சிறந்த தன்னிடத்திலுள்ள பல முதுநூல்களைக கால மாறுபாட்டால் நீருண்ண, நெருப்புண்ண,நிலமுண்ணக் கொடுத்து இழந்தமை