பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ப் புலமை யானும். தன்னைப் பயில்வார்க்கு இம்மை இன்புதவும் பொருட்பேற்றுக்கு இக்காலத்து அரசியல் இ-ந்தரா மையானும், பிறவாற்றானும் தன் ஆக்சங்குன்றி விற்கின்றது. ஒரு நாடு தனக்குரிய மொழியை ஆக்கமுற ஓம்பிப் பாதுகாத்தாலன்றித் தான் சிறந்த நிலை எய் துதல் அரிதாம். மொழி வளர்ச்சி கொண்டே அது வழங்கும் நாட்டின் நலத்தை யுணரலாம். எந்த நாடு தன் மொழிச் சுவையை உணர்தலிற் பின்னடைகின்ற தோ, அது மற்றை யெல்லா வளங்களானும் பிற்பட்ட தாகும். ஆதலின், தமிழ்ச் செல்வர்களும் தமிழ்ப புலவர்களும் விழிப்புடையராய் நின்று கம் உடைமையை விளக்கமுறப் பேணல் வேண்டும். நம் மொழி வளர்ச்சியில் நாம் செயற்பாலன பலவாகும். 50 நோக்கங்களோடு நிலைபெறல் முதலாவது, இற்றை காள் தமிழ் வழங்கும் நிலம் எல்லாவற்றுக்கும் பொதுவாக ஒரு சிறந்த கல்லூரி தமிழ் நாட்டின் நடுவண் நீர் நில வளங்கள் நிறைந்த அகன்ற இடத்தில், ஆசிரியர்களும் மாணவர்களும் ஒருங்கிருந்து, கல்வியை உயரிய பயிற்றவும் பயிலவுக் தக்க முறையில் வேண்டும். இம்மை நலம் பெறற்குரிய மருத்துவம் தொழிற் கல்வி முதலிய பயிற்சிகளும் உடன் நிகழ்தல் இன்றியமையாததாகும். அக்கல்லூரியின் உறுப்புக் களாகப் பல நிலையங்க ளமைத்து அவற்றால் தமிழுக்கு வேண்டற்பாலனவாகிய பிறமொழி நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டும், புதிய உண்மையாராய்ச்சிகள் செய் யப்பட்டும், பல நூலுரைகள் வெளிவரல் வேண்டும். தமிழ் நாடு முழுதும் இதுகாறும் நிறுவப்பட்டனவும்,