பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ப் புலமை களைக் கொண்டு விளக்கமான சிறந்த முறையில் மொழி பெயர்ப்பித்து வெளிப்படுத்தல் வேண்டும். இத் துறை தமிழ் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்ற தொன்றாம். வேற்று மொழிகளிலுள்ள ஒரு திறப்பட்ட பல நூல்களை நன்கு பயின்று அவற்றின் திரண்ட கருத்துக்களைத் தொகுத் துத் தனித்தமிழ் நூலாக வெளிப்படுத்தல் சாலச் சிறந்த தாகும். இத்துறையில் தமிழ்ப் புலவர் முற்படுவா ராயின், 'மேல் வகுப்புப் பயிற்சிக்குரிய பல திறப்பட்ட நூல்கள் தமிழில் இல்லையே' என்னுங் குறை ஒழிந்து விடும். மொழி பெயர்ப்பால் ஒரு மொழி நூல்வளர்ச்சி பெறுதல், அம் மொழிப் புலவர் இயன்மதி யாற்றற்கு அத்துணைச் சிறப்பிள் றென்பது உண்மை யெனினும், இயற்கையாகப் பல புதிய சிறந்த நூல்களை மதிவலி யால் ஆக்கும் ஆற்றல், வளர்ச்சி யெய்துங்காறும் மொழி பெயர்ப்புச் செயலை மேற்கோடலால் இழுக் கின்று என்பது என் கருத்து. இது கருதியே மொழி பெயர்த்து அதர்ப்பட யாத்தலையும் நூல் யாப்பு வகை யுள் ஒன்றெனக் கண்டனர் தொல்காப்பியனாரும் என்க* 61 சென்னைப் பல்கலைக் கழகத்தையும், அதனினும் தமிழ் வளர்ச்சிக்கு மிக நெருங்கிய இயைபுடைய அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தையும், தெய்வத் தமிழுஞ் சைவத் துறையஞ் செழித் தோங்க எழுந்த திருவாவடுதுறை, திருப்பனந்தாள், தருமபுரம் முதலிய செல்வமலி சைவ மடங்களில் விளங்குத் தலைவர்களையும் தமிழ் நிலத்துச் சிற்றரசர்களையும், தமிழன்பர்களாகிய மற்றைத் திருவுடையாரையும் மேற் காட்டிய தமிழ் வளர்ச்சிக்கு வேண்டுவன செய்யும் வண்ணம் இன்