பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம் பண்டையகீதி நூலாசிரியர் பெரிதம் தழுவப்படுவது கௌடலியம் என்னும் நூலேயாம்.வியாழனால் ஆக்கப்பட்ட நூலினும் வெள்ளி யாகிய சுக்கிரரால் ஆக்கப்பட்ட நூல் தென்னாட்டு வழக்க வொழுக்கங்களுக்குப் பெரிதும் இயைபுடைய தாகும். இவற்றின் பின்தோன்றிய கௌடலிய நூலின் தொடக்கத்தில் அதன் ஆசிரியர் பூர்வாசார்ய வணக்க மாகச் "சுக்கிரபிருகஸ்பதிப்யாநம :" "சுக்கிரற்கும் பிருகற்பதிக்கும் வணக்கம் என்று கூறியுள்ளார். இதனாலேயே வெள்ளி நூலின் விழுப்பம் புலப்படுவ தாகும். பிற்காலத்துக் கவிஞர் பெருமானாகிய கம்பர், "வெள்ளியும் பொன்னும் என்பார் விதிமுறை வகுத்த நூலில் என்று முறைப்படுத்துக் கூறியதும் இதனை வலி யுறுத்தும். இங்ஙனம் சிறந்துள ஔசகசத்தின் சுருக்கமே 'சுக்கிர நீதி' யென்னும் மேற் பொருள் நூலாகும். 67 இச் சுக்கிர நீதியைத் தமிழ் மக்கள் நலங் குறித்து மொழி பெயர்த்தபொழுது, யான் கண்ட புதுமைகளும் பழமைக்குரிய சான்றுகளும் பலவாம். " புதல்வர்ப் பேற்றை விரும்பும் பெண் மக்கள் வயிரமணியை அணிதலாகாது" என்று கூறப்பட்டுள்ளது. கருவைத் தடைப்படுத்தற்கு வைரவொளி எங்ஙனங் காரண மாகும் என்பதைக் கலவை (இரசாயன) நூலார் ஆராய்தல் வேண்டும். இதுபோன்றன புதியனவாம். நீர்ப்பொறி, இசைப்பொறி, காற்றியக்கும் பொறி, கம்பிவழிச் செய்தியனுப்புங் கருவி, நீராவியால் இயக் கம்படும் பொறிகள் முதலிய இக் காலத்துக் காணப் படும் இயந்திரத் தொழில்களைப் பற்றியும் அந் நூலிற் கூறப்பட்டுள்ளன. ஆனால், இவற்றின் அமைப்பு முறை