பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம் பண்டைய நீதிநூலாசிரியர் "மழைவளங் கரப்பின் வான்பே ரச்சம் பிழையுயி ரெய்திற் பெரும்பே ரச்சம் குடிபுர வுண்டும் கொடுங்கோ லஞ்சி மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்ப மல்லது தொழுதக வில்லென' என்று இளங்கோவடிகள் கூறியது நினைந் தின்புறத் தக்கது. "அரசன் குடிகளிடத்தினின்று தனக்குரிய அரசிறையாகிய வேதனத்தைப் பெறுதலால், அக் குடி களுக்கு ஏவலாளர் தன்மையுடையனாவான்" எனவும், "பூ மரத்தை வளர்த்து மலர் பறித்து மாலை கட்டிப் பயன் பெறுபவனை யொப்பக் குடிகளைப் பாதுகாத்து அவர்பால் அரசிறை பெறவேண்டும்" எனவும், "அங் ஙனமன்றி அம்மரத்தை எரித்துக் கரிசெய்து பயன் பெறுதல் போலக் குடிகளைக் கெடுத்துச் சிறுபயன் கொள்ளலாகாது" எனவும் சுக்கிரநீதி கூறுகின்றது. இச் செய்திகள் மிகவும் பாராட்டற் குரியனவாம். 69 திருக்குறட் பொருட்பகுதி அரசர் அமைச்சர் படைத் தலைவர் முதலியோரின் இலக்கணங்களாகக் கூறப் பட்டனவும் பிறவும் யாண்டும் காண்டற்கரியனவாம். ஒற்றர் இயல்பு கூறுங்கால், ஒற்றும் நீதி நூலும் ஆகிய இரண்டும் அரசர்க்கு இரு கண் களாகும் என்று கூறப் பட்டுள்ளது. நாட்டின் இலக்கணங் கூறுங்கால், ஒரு காட்டில் வாழ்வார் தேடி வருந்தாமல் வேண்டுவன வெல்லாம் ஆங்கே பெறத்தக்கதாக இருத்தல் வேண் டும் என்னுங் கருத்தமைய "நாடென்ப நாடாவளத் தன" என்கிறார். பிணியின்மையும், நிரம்பிய செல்வ மும், விளைவும், இன்பமும், காவலும் ஆகிய இவ் வைந்தும் நாட்டிற்கு அழகு செய்வன வெனவும் கூறப்