பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 உரைநடைக் கோவை பட்டுள்ளன. இதனால் அரசன் தன் நாட்டை இத் தகுதிகளுக்கு உரியதாக அமைத்துக்கொள்ளல்வேண்டு மென்பது புலனாகும். அமைச்சரியல்பு கூறுங்கால், வினைத்தூய்மை,வினைத்திட்பம், வினைசெயல் வகை என மூன்றதிகாரங்கள் காணப்படுகின்றன. இவற்றை ஊன்றிப் படிப்பார்க்குத் தாம் செய்யவேண்டிய காரியங் களைப் பற்றிய தெளிவு கல்லெழுத்துப்போல நெஞ்சிற் பதிவதாம். திருக்குறளே யல்லாமல் நாலடியார், நான் மணிக்கடிகை, திரிகடுகம், சிறுபஞ்சமூலம் முதலிய சங்கமருவிய நீதிநூல்களும் தமிழிற் பல வுள. அவை யெல்லாம் மக்கள் ஒழுக்கமுறைகளை வரை யறுத்துத் தெளிவுபடுத்துவனவாகும். நாலடியார் என்னும் நூல், கற்பார் மனத்தைக் கவர வல்லது, "ஆலும் வேலும் பல்லிற் குறுதி, நாலு மிரண்டுஞ் சொல்லிற் குறுதி" என்னும் பழமொழியில் நாலென்பது நாலடியாரையும் இரண்டு என்பது ஈரடி யானமைந்த திருக்குறளையுங் குறிப்பனவாம். ஒருவன் சிற்சில செயல்களிற் செவிடனாய்க் குருடனாய் ஊமையா யிருத்தல் வேண்டுமென நாலடி கூறுகின்றது இம் முறை வியக்கத்தக்கது. இதன் கருத்து, பிறர் இரகசி யங்களைக் கேட்பதிற் செவிடனாகவும், பிறர்மனைவி யரைக் காம நோக்கமாகக் காண்பதிற குருடனாகவும், பிறரைப் பற்றிக் காணாவிடத்துப் புறங் கூறுவதில் ஊமையாகவும் இருத்தல் வேண்டும் என்பதாம். இங் ஙனம் சாதுரியமாகக் கூறுமியல்பு இந் நூலிற் பலவிடங் களிற் காணலாம்.ஒருவன் மற்றொருவன்பால் இல்லாத குணங்களைப் புகழ்தலினும் அவனை வைதல் நல்லதென்