பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்க வாசகர் 81 பற்றின்றி ஒழுகுதலை மேற்கொண்டன ராதலின், அவற்றால் ஏதும் இடர்ப்பாடு அடைந்திலர் என்பது விளங்கும். ஒருவன் எவ்வெப் பொருள்களிற் பற்றொழிந்திருக் கின்றானோ, அவ்வப் பொருள்களால் வருந் துன்பத் திற்கு ஆளாகான் என்பது பெரியவர்கள் கண்ட உண்மை. அடிகள் விருப்பு வெறுப்பற்ற நிலையில் நின் றார்களெனினும், மக்கள்பாலுள்ள சோதர உரிமையை விட்டவரல்லர். அதற்குக் காரணம் அன்னாரெல்லாம் தாம் பெற்ற பேரின்பப் பெருவாழ்வில் தலைப்பட வேண்டுமென்னும் கருணையேயாகும். இவ் வரு ளறத்தை மேற்கொண்டே, 'காலமுண்டாகவே காதல் செய்துய்ம்மின்' என்றும், மூலபண்டாரம் வழங்கு கின்றான் வந்து முந்துமினே' என்றும், 'மூதுலகுந் தருவான் கொடையே வந்து முந்துமினே' என்றும், உலகத்தவரை நோக்கி அருளமுதத்தை உடனுண்ண. அழைப்பாராயினர். அவர் அன்புடன் விடுத்த அழைப்பிற் கிணங்கி வாராத மடவோரை, உலக நிலையாமையை யுணர்த்தி அஞ்சுவித்தாயினும் அழைத்து ஊட்டவேண்டு மென்னும் அருள் நிறை வால், 'நிற்பார் நிற்க நில்லா உலகில் நில்லோ மினி நாம் செல்வோமே' என்று திருவாய் மலர்ந்தருளினர். இனி, அடிகள் உலகியலைக் கடந்த நிலையில் நின்று, மாற்ற மனங்கழிய நின்ற மறையோனாகிய இறைவன் அருள் வெள்ளத்துள் மூழ்கிப், பேரின்ப நிலையில் தடைப்பட்டு அநுபவித்த உண்மைகளெல்லாம் மனம் வாக்குகளுக்கு அடங்காதனவாகவும், அவற்றைப் 6