பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்க வாசகர் 83 என்பதாம். சுவைமிக்க அமிர்தத்தைப் பெய்து வைத் தற்குரிய கலத்தில் அவ்வமிர்தத்திற்கு மாறுபட்ட முதலில் பொருள் இருத்தலாகாது. இருக்குமாயின், அதனை அறவே ஒழித்துவிட வேண்டும். பின்னர், அக் கலத்தை உரிய கருவி கொண்டு அழுக்கொழித் துத் தூய்மைப்படுத்த வேண்டும். அதன் பின், நல் லமிர்தத்தைப் பெய்து வைத்தல் முறையாம். இஃது உலகியலிற் கண்டது. இவ்வுண்மையை நினைவு கூர்ந்து அடிகள் இத்திருப்பாடலில் ஓர் அரிய அநுப வத்தை வெளியிடுவராயினா. இறைவனார் தம் அருள மிர்தத்தை அடிகள் உள்ளமாகிய கொள் கலத்தில் பெய்து வைக்கத் திருவுளங் கொண்டு, அதன் கண் நீண்ட காலமாக ஈட்டப்பட்டு நிறைத்து வைத்த மாயா காரியப் பொருள்களாகிய துன்பங்களை அறவே ஒழித் துப்,பின் மயக்க உருவமாகப் படிந்து கிடந்த இருளைத் தன் அருட் பார்வை யொளியாற் போக்கிப் பேரின்ப மயமாகிய அருளமிர்தத்தைப் பெய்து இன்புறுத்தினா ரென்பதும், அந் நிலையில அடிகள் உள்ள முழுதும் அன்பு மயமான குளிர்ந்த இடமாக அதன்கட் பெரு மான் வீற்றிருந்தருளின ரென்பதும் இதன்கட் புலனாம் 'சோதியாய் நின்று இருளகற்றித், துன்பந் தொடர்வறுத்து இன்பம் பெருக்கி, அன்பமைத்து என் னுடைய சிந்தையே ஊராகக் கொண்டான்' என நிர னிரைப் பொருள்கோளாக அழகு பொருந்தத் திருவாய் மலர்ந்தருளினர். படி, இங்ஙனம் மாணிக்கவாசக அடிகள் நம்மனோர் உய்யும்பொருட்டுத் தாம் அநுபவித்த சிவாநந்தத் தெள்ளமுதைச் சொல்லினிமை பொருளினிமைகளிற்