பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரு. சங்க காலத்து அங்கதம்* ஆங்கில மொழியில் Satire (செடயர்) என்பது தமிழில் அங்கதம் என்று வழங்கப்படும். தமிழிற் காலத்தால் முற்பட்ட தொல்காப்பிய மென்னும் இலக் கண நூலில், இவ்வங்கதம் பற்றி வந்த செய்யுளின் இலக்கணமும் வகையும் இன்னவென, வசையொடும் நசையொடும் புணர்ந்தன் றாயின் அங்கதச் செய்யு ளென்மனார் புலவர்" "அங்கதந் தானே அரில்தபத் தெரியின் செம்பொருள் கரந்த தெனவிரு வகைத்தே" "மொழிகரந்து சொல்லினது பழிகரப் பாகும்" என்னும் இவை முதலிய சூத்திரங்களால் தெளிய உரைக்கப்பட்டன. (ஒருவனுடைய குறையையோ ஒரு சமூகத்தாரின் குறையையோ, அன்னார் நெஞ்சில் உறுத்தும் வண்ணம் வெளிப்படையாகவும் குறிப்பாக வும் கூறுதல் அங்கதமாகும். அங்ஙனங் கூறுங்கால், நகைச்சுவை தோன்றக் குறிப்பாகக் கூறுதல் இன்புறத் தக்க தொன்றாகும். "திருச்சிராப்பள்ளி வானொவியிற் பேசியது