பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 உரைநடைக் கோலை இவ் வங்கதம், வெளிப்படையாகக் கூறுதல், கரந்த மொழியிற் கூறுதல் என இருவகைப்படும் என் பது, முற்கூறிய இரண்டாம் சூத்திரத்தால் அறியப் பட்டதொன்று. வாய் காவாது சொல்லும் வசையே இங்குச் செம்பொருளங்கதம் எனப்படும். இதனைச் செவியா லநுபவிக்கப்படுஞ் சொற்சுவை பொருட்சுவை களை யுணராது வாயால் நுகரப்படும் உணவின் சுவை யிலேயே ஈடுபடும் மனிதர் செத்தால் வரும் இழப்பும் வாழ்ந்தால் வரும் பேறும் இன்மையால் உலகிற்கு அவரால் வருவது யாது? என்னும் பொருள் தோன்றக் கூறிய, "செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினு மென்?" என்னுந் திருக்குறளால் அறியலாம். இங்ஙனம் வெளிப்படையாகக் கூறல் நீதி நூற்கு இயல்பாகும். கவிநயந் தோன்றக் கூறற்குக் கரந்த மொழியாற் கூறலே சிறந்ததாகும். இதனையே இங்கே குறிப்பிட்ட இறுதிச் சூத்திரம் புலப்படுத்தும். வசைப் பொரு ளினைச் செம்பொருள் படாமலிசைப்பது பழிகரப் பங்கதமென்று பெறப்பட்டமையால், இதுவே Satire என்று கூறுவதற்குப் பொருத்தமாகும். இப் பகுதிக் கும் திருக்குறளிற் பல சான்றுகள் உள்ளன. "தேவ ரனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான்" என்னுந் திருக்குறளில், நெஞ்சத்து அவல மில்லாத வஞ்சக் கயவர் சாதாரண மண்ணுலக மக்களுக்கு ஒப்பாகார்; ஆனால், அவர்கள் உயர்ந்த விண்