பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க காலத்து அங்கதம் ணுலகத்து வாழும் தேவர்க்கு ஒப்பாவார்;எதனா லெனின், தேவர்கள், தம்மை நியமிப்பாரின்றி 87 எண்ணியவற்றைத் தாமே செய்தொழுகுதல் போல, கீழ்மக்களும் நல்லன தீயன ஆராயாது தாம் விரும்பு வனவற்றை விலக்கற்பா டின்றிச் செய்தொழுகும் இயல்புடைமையான் என்று குறிக்கப்பட்டுள்ளது. மறைந்த மொழிகளாற் கயவருடைய கயமைக் குணங்களை நகைச் சுவை தோன்ற இடித்துரைக்கும் வள்ளுவர் வாய் மொழியின் மாண்பு இங்கே நினைக்கத் தக்கது. வசை யெடுத்துக் கூறுங்கால் அவ் வசையுடை யார் அஃதொழிந்து திருந்தவேண்டும் என்னும் நோக் கத்தாற் கூறுதல் நன்று. அந் நோக்க மின்றீயுங் கூற லாம். இவ் விலக்கண அமைதிப்படி, சங்க நூல்களிற் காணப்படுங் குறிப்புக்களை ஆராய்தல் இன்பம் பயப்ப தொன்று. தொகை நூல்களிற் சிறந்த புறநானூறு என்னும் சங்கச் செய்யுளில். ஒளவையார் என்னும் கவியரசியின் புலமை நலத்தைப் பாராட்டாதா ரிலர். தமிழ் நாட்டு முடியுடை மூவேந்தராலும் குறுநில மன்னராலும் போற்றப்பெற்று வாழ்ந்த ஒளவைப் பெருமாட்டி, சேரர் குலத்தவரின் உறவினனும் மழவர் என்னும் வீரர்களுக்குத் தலைவனும் கடை வள்ளல் களில் ஒருவனும் ஆகிய அதியமான் நெடுமானஞ்சியி னிடத்துப் பெரிதும் அன்புடையராய். அவனால் காஞ்சி நகரத்திருந்த தொண்டைமான் என்னும் அரசனிடம் தூது விடுக்கப் பட்டு அவன்பாற் சென்றாள். தொண்டைமான், தன் வீரத்தையும் படைப் பலத்தையும் ஒளவையார் கண்டு ஆதரிக்கப்பட்டிருக்குங்கால்,