பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 உரைநடைக் கோவை விம்மிதங் கொள்ளவேண்டு மென்னும் இறுமாப் புடையனாய் ஒளவையை நன்கு வரவேற்றான்; ஆயுத சாலையாகிய படைக்கலக் கொட்டிலைக் காட்டினான். அங்கே வேல் வாள் முதலிய படைகள், திரண்ட அழகிய கைப்பிடிகளை யுடையனவாய் எண்ணெய் பூசப்பட்டு மயிலிறகு மாலை முதலியன அணியப்பட்டுக் காவலையுடைய அகன்ற அழகிய கட்டிடத்தில் எவ ராலுந் தொடப்படாமல் வைக்கப் பெற்றிருத்தலைக் கண்டு வியந்து கூறுவார் போன்று செருக்கு மிக்க தொண்டைமான் நெஞ்சில் உறுத்தும் வண்ணம் ஓர் அழகிய பாடலைக் கூறினர். அப் பாடற் பகுதி, "இவ்வே, பீலி அணிந்து மாலை சூட்டிக் கண்டிர ணோன்காழ் திருத்திநெய் யணிந்து கடியுடை வியனக ரவ்வே யவ்வே பகைவரிக் குத்திக் கோடுநுதி சிதைந்து கொற்றுறைக் குற்றில மாதோ" என்பதாம். இதன்கண், அதியமான் அடிக்கடி அஞ்சாது செய்யும் போர்ச் செயலில் தலைப்படுதலால் அவனுடைய படைகள் போரிற் பயன்படுத்தப்பட்டுப் பகைவரைக் குத்தியதால் கங்கும் முனையும் சிதைந்து கொல்லனது பணிக்களரியாகிய சிறிய கொட்டிலின் கண் உள்ளன என்றும், தொண்டைமான் அத்தகைய போர்ச் செயலில் தலைப்படாமல் அஞ்சி யொழுகும் இயல்பின னாதலின் அவன் படைக் கலங்கள் எத் எத்தகைய சிதைவுமின்றி எண்ணெய் பூசப்பட்டு வனப் புடன் அழகிய மாளிகையில் தூங்குகின்றன என்றும் கூறிய அழகு இன்புறத் தக்கது. தொண்டை