பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க காலத்து அங்கதம் குறிப்புக்கள் பற்பல இடங்களில் மிக நயம்படக் கூறப் பட்டுள்ளன. கற்றறிந்தா ரேத்தும் கலித்தொகை என் னும் நூலில், மருதத் திணைபற்றிய 'வணடூது சாந்தம் வடுக்கொள் நீவிய' என்னும் பாடற் பகுதி ஈண்டுச் சிந்தித்து இன்புறத் தக்கது. பரத்தைபாற் சென்று வந்த தலைமகனை அது குறித்து ஊடல மேற்கொண்ட தலைமகள், 'நீ புறத்துப் போய்க் கண்ட வினோதம் என்னை?' என்றாளாகத் தலைவன், "யாமிருவரும் இனி மேல் மேற்கொள்ளத் தக்க வானப்பிரத்த வாழ்க் கைக்கு உதவியா யிருக்கும் முனிவரரைக் கண்டு அவ ரிடத்தே தங்கினேன்" என்றான். அது கேட்ட தலைவி, சோலையின் கண்ணே மலர் சூடிய மான் பேட்டினை ஒத்தவராய்க் கடவுட் டன்மை உள்ளவராக உன்னாற் கருதப்படுவார் பலருள், எக் கடவுளிடம் தங்கினாய்? என்று கேட்டாள். அவட்கு அவன், 'நம் மண வாழ்க் கைக்கு நன்னாள் வாய்ப்பச் சொன்ன அந்தக் கடவுள் கா'ணென்று தன் பரத்தைமையை மறைத்து மீண்டுங் கூறினானாக, அது கேட்ட தலைவி, 'நீ கூறியது எனக் கும் ஒக்கும்' எனத் தனது ஒவ்வாமை தோன்றக் கூறு வாளாய், 'ஐய! தலையைச் சாய்த்து நாத் தடுமாற நீ கூறிய சொற்களாலேயே நீ அகப்பட்டுக்கொண்டாய். நீ கண்ட கடவுளரியல்பை உண்மையாக யான் கூறு வேன்; அதனைக் கேட்பாயாக' எனத் தொடங்கி, பெறனசை வேட்கையி னின்குறி வாய்ப்பப் பறிமுறை நேர்ந்த நகையராய்க் கண்டார்க்கு இறுமுறை செய்யும் உருவொடு நும்மில் செறிமுறை வந்த கடவுளைக் கண்டாயோ?" எனவும், 91