பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.வானமாமலை

15


பரிபாடல்

கார்ப் பருவத்து வையை நீர் விழவணியில் பல்வேறு வகைப்பட்ட இன்பம் கூறி இவ்வகைப்பட்ட இன்பத்தையுடைய நின்னையும் நினைத்திலர் என வையையை நோக் கித் தலைமகன் கேட்பத் தோழி இயற்பழித்தது. (12) காதல் பரத்தையுடன் புனல் ஆடிய தலைமகன் தோழியை வாயில் வேண்ட, அவள் புனல் ஆடியவாறு கூறி வாயில் மறுத்தது. (16)

பதிற்றுப்பத்து

'நீர் வேண்டியது கொண்மின்' என 'யானும் என் பார்ப்பணியும் சுவர்க்கம் புகல் வேண்டும்’ எனப் பார்ப் பாரிற் பெரியோரைக் கேட்டு ஒன்பது பெருவேள்வி வேட்பிக்க பத்தாம் பெருவேள்வியில் பார்ப்பானையும் பார்ப்பனியையும் காணாராயினார். (மூன்றாம் பத்து) 'கலன் அணிக’ என்று அவர்க்கு ஒன்பது காப் பொன்னும், நூறாயிரம் காணமும் கொடுத்துத் தன் பக்கத்துக் கொண்டான் அக் கோ. (ஆறாம் பத்து) தானும் கோயிலாளும் புறம்போந்து நின்று 'கோயில் உள்ள எல்லாம் கொண்மின்’ என்று காணம் ஒன்பது நூறாயிரத்தோடு அரசு கட்டிற்கொடுப்ப அவர் 'யான் இரப்ப இதனை ஆள்க’ என்று அமைச்சுப் பூண்டார்.

(எட்டாம் பத்து)

மேற்காட்டப்பட்டவை இலக்கியத்தில் கையாளப்பட்ட உரைநடைக்கு எடுத்துக்காட்டுகள் ஆவன. இவை செய்யுள் நடை போலவே செறிவுடையதாகவும் அருஞ்சொற்கள் நிறைந்ததாகவும் இருக்கின்றன. செய்யுளின் பொருள் அறிந்து கொள்ளும் திறமையுடையவர்களுக்காகவே இவை எழுதப்பட்டன. ஆதலால் இந்நடை பேச்சு வழக்கைப் போல நெகிழ்ச்சியும் எளிமையுமின்றி, புலமையுடையோர்க்கே விளங்குவதாக உள்ளது.

பல்லவர் கால உரைநடை

இதே காலத்தில் கல்வெட்டுக்களிலும் செப்பேடுகளிலும் காணப்படும் உரைநடை வேறுவிதமானது. செப்பேடுகளின் முதல் பகுதி கிரந்த வரிவடிவத்தில், சம்ஸ்கிருத மொழியில் செதுக்கப்பட்டிருக்கிறது. இப்பகுதி பல்லவர் பரம்பரையின்