பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இடைக் காலம்


பல்லவர் காலத்தையொட்டி வேளாண்மை வளர்ச்சி ஏற்பட்டது. நீர்ப்பாசன வளர்ச்சியால் பரவலாக விரிவுபடுத்தப்பட்ட விவசாயப் பொருளாதாரம் மக்கள் வாழ்க்கையில் பல மாறுதல்களை உருவாக்கியது. தொல்காப்பியர் காலத்து வாழ்க்கை முறை மாறிய பின்னர், தொல்காப்பியப் பொருள் இலக்கணச் சூத்திரங்கள் பழமையானவையாயின. இலக்கய மரபில் புது மரபுகள் தோன்றின. எனவே, பொருட்பால் சூத்திரங்களில் பழமையானவற்றை விவரிக்கவும், புதுமையானவற்றைப் புகுத்தவும் தேவை தோன்றியது. எனவே பழைய கருத்துக்களின் விளக்க மாகவும் புதிய கருத்துக்களின் முன்னுரையாகவும். களவிய லுரையாசிரியர் உரைநடையைப் பயனபடுத்தினார். அவர் நடைக்கு ஒர் எடுத்துக்காட்டுக் காட்டுவோம். இனிக் காமம் நன்றாமாறும் உண்டு. சுவர்க்கத்தின் கண் சென்று போகம் துய்ப்பல் என்றும், உத்தரகுருவின் கண் சென்று போகம் துய்ப்பல் என்றும், நன்ஞானம் பெற்று வீடு பெறுவல் என்றும், தெய்வத்தை வழிபடுவல் என்றும், எழுந்த காமம கண்ட யன்றோ? மேன் மக்களாலும் புகழப்பட்டு மறுமைக்கும் உறுதி பயக்கும் ஆதலின் இக்காமம் பெரிதும் உறுதி உடைத்தென்பது இது இலக்கிய நடை. ஆயினும் இது, தருக்க முறையில் சிந்தனைத் தெளிவோடு கருத்துக்களை வெளியிடும் ஆற்றல் பெற்றுள்ளது. இதன் பொருளடக்கம் தோல்காப்பியர் காலத்துக்கு முன்பிருந்து, உரையாசிரியர் காலம் வரை ழகி வந்த அகப்போருள் நிகழ்ச்சிகளே. அக்காலத்திலேயே பாண்டியர் கல்வெட்டுக்களும் பல்லவர் கல்வெட்டுக்களும், உரைநடையை எளிதாக்கியுள்ளன. பல புதிய சமுதாய மாற்றங்களால் தோன்றிய கருத்துக்களையும் நிகழ்ச்சிகளையும் விளக்கும் முறையிம் உலகியல் உரைநடை பும் வளர்ச்சி பெற்றது. 33/2