பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

உரைநடை வளர்ச்சி


தண்டனைகள் அளிப்பதையும் தற்காலச் சட்டங்களைப்போல இக்கல்வெட்டுக் கூறுகிறது. முதற் கல்வெட்டுக் காலத்திற்குப் பின் சபையின் அலுவல்கள் விரிவடைந்துவிட்டன. அதனை பொட்டிச் சபையின் ஆளுங்கணங்களின் பணிகளைச் செய்வோரது பொறுப்புகளும் அதிகாரமும் மிகுதியாயின. அதனை ஒழுங்குபடுத்தக் குடவோலை முறை விதிகள் மாற்றப்பட்டன. பழைய விதிகளை அனுசரிக்கும்பொழுது ஏற்பட்ட அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, விதிகளை மீறுவோர் கடுந்தண்டனை விதிக்கப் புதிய விதிகள் இயற்றப்பட்டன. இவை யாவும் கிராம வாழ்க்கையில் வழங்கிய சொற்களாலும் சொற்றொடர்களாலும் தொகுக்கப் பெற்றுள்ளன. புதிய கருத்துக்களுக்கு ஏற்ற தமிழ்ச் சொற்களோ சமஸ்கிருதச் சொற்களோ தேர்ந்தெடுத்துக் கொள்ளப்பட்டன. எடுத்துக்காட்டாகக் கூட்டம் இடுதல் (to assemble) நாற்பது வயதில் தாழாதார்(not less than forty years of age),செய்தபடிக் கீடாத (substituting an amendment)புகுதல் செய்தார் (to gain entry int power illegally) பணிப்பணி போன்ற தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தப்பட்டன. இனி தச் சொற்களும் புதிய கருத்துக்களை வெளியிடப் :த்தப்பட்டுள்ளன. அவை, மூலப்ருவுை (கோயிலை குழுவினர்), ஸ்ம்வத்ஸ்ரம் 360 நாட்கள். இது ந்து வேறுபட்ட பொருளில் வழங்கும். குடவோலை ந்து 350 நாட்களைக் குறிக்கும்). நியோகம் (records), சபாவிநியோகம் (accounts of the sabha), ப்ராப்தமானபடிக்கு (legally fixed) ஆகியவையாகும். ஆய்வுத் துறையில் உரைநடை வளர்ச்சி பெற்ற முறைக்கு இக்கல்வெட்டு வாசகங்கள் எடுத்துக்காட்டுகளாகும்.

குறள் உரைகள்

சோழர் கால இறுதியிலும், அதற்குப் பின்னும் பழங்கால இலக்கிய இலக்கண நூல்களையும் சமய நூல்களையும் கற்கும் பேரார்வம் தோன்றியது. சங்க நூல்கள் சிலவற்றிற்கும் திருக்குறளுக்கும் சீவகசிந்தாமணிக்கும் திருக்கோவையாருக்கும் சிறந்த உரைகள் தோன்றின. இவ்வுரையாசிரியர்கள் புலமை மிக்கவர்கள். நூல்களைக் கற்க விரும்பும் மாணவர்களுக்கு நேரில் கற்பிக்கும் முறையிலேயே அவர்கள் உரையெழுதினார்கள். அவ்வுரைகளில் தருக்க முறைப்பட்ட விவாதங்களும் போதனா முறைப்பட்ட விளக்கங்களும் காணப்படுகின்றன.