பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

உரைநடை வளர்ச்சி


இதனை ‘நாலாயிரத்துக்கு'த் தத்துவப் பொருள் கூற விரும்பிய வைணவ ஆசாரியர்களும் பயன்படுத்தினர். ஏனெனில் விஜயநகர ஆட்சி தென்னாட்டு மொழிகள் நான்கும் வழங்கிவந்த நாடுகளில் பரவியிருந்தது. எனவே அவர்களும் தங்கள் சமயத்திற்கு ஒரு இணைப்பு மொழியினைத் தேடினார் கள். சமணர் இதனைப் பயன்படுத்திய முறையை ஶ்ரீபுராணம், சத்திய சிந்தாமணி முதலிய நூல்களிலும், நீலகேசி, மேருமந்தர புராணம் முதலிய நூல்களின் உரைகளிலும் காணலாம். சமயத் தத்துவப் பொருள்கள் ஒரு சிலருக்கே விளங்குவனவாதலால், இந்நடை சமயப் பெரியார்களிடமும் அவர்களிடம் நேரடியாகப் பாடம் கேட்டவர்களிடமும் தேங்கி நின்றுவிட்டது. வைணவ ஆச்சாரியார் மணிப்பிரவாளத்தைச் சமயக் கருத்து விளக்கத்திற்கும் தமிழ் நடையை, உவமைக் கதைகள் கூறவும் எழுதியுள்ளார்கள். இவையிரண்டிற்கும் கீழே எடுத்துக் காட்டுகள் தருவோம்.

அநந்தரம் பெரியாழ்வார் திருமொழி முதலான ஆழ்வார்கள் அருளிச் செயல்களுக்கு எல்லாம் வியாக் யானம் செய்தருளி லோகத்தை வாழ்வித்த ருளினார். வேதார்த்தம் அறுதியிடுவது ஸ்ம்ருதிஹாஸ புராணங் களாலே, இதிஹாஸ சிரேஷ்டமான ஶ்ரீராமாயணத்தால் சிறையிருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது. மஹாபாரதத் தால் தூதுபோனவன் ஏற்றம் சொல்லுகிறது.

குருபரம்பரா பிரபாவத்தில் மணிப்பிரவாளத்தைத் தத்துவ விளக்கத்திற்கும், தமிழைக் கதையும் வரலாறும் சொல்லுவதற்கும் ஆசிரியர் பயன்படுத்துகிறார். ஆண்டாள், தான், திருமாலுக்கு ஏற்றவள்தானா என்று மதிப்பிடுவதற்காக அணிகலன்கள் பூண்டு கண்ணாடியில் தன் உருவத்தைக் காணும் காட்சியைப் பின்வருமாறு குருபரம்பராப் பிரபாவம் கூறுகிறது. இதில் வருணனைத் தமிழ் நடையே பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆழ்வார் இல்லாத அவசரங்களிலே கட்டி வைத்திருக்கும் மாலைகளை எடுத்துச் சூடிக்கொண்டு, இந்த வட பெருங்கோயிலுடையானுக்கு நேர் ஒவ்வாதிருக்கிறேனோ, ஒத்திருக்கிறேனோ, என்னும் சொல்விளைத்து, காரை பூண்டு, கூரை உடுத்து, சூடகம் அணிந்து, தோள் வளை தரித்து, கைவளை குலுக்கி, காலில் சிலம்பும் பாடகமும் அணிந்து, அஞ்சனம் தீட்டி, செவ்வாய் திருத்தி