பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.வானமாமலை

33


உள்ளன. இறுதிப் பத்தியில், 'கழுக்கு மழுக்கு, வள்ளிக் கிழங்கு, பரந்த முகம், ஆனவாகனன் என்ற சொற்கள் புதியவனை வருணிக்கின்றன. வருணனைக்குக்கூடப் பேச்சு வழக்குச் சொற்கள் பயன்படுத்தப்பட்டு ஆளையே நம்முன் கொண்டு வந்து நிறுத்திவிடுகிறார் ஆசிரியர். தகவலை-உரையாடலைத் தம் சொற்கள் மூலம் {ரிப்போர்ட் செய்கிறார்) சொல்லுகிறார். தகவல் தரும் பகுதி யில், 'யாதாமொருத்தன், தீர்த்த காரியம், விச்சுத் தீர்த்த படிக்கு, ஒரு காசு ஒசத்தலும்' போன்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை இன்றைய வாசகனுக்கு அந்நியம் தான். ஆயினும் இதே பிரயோகங்கள், முற்கால, சமகாலக் கல்வெட்டுக்களில் பயின்று வருவதைக் காணலாம். யாதாமொருத்தன் இதுக்கு அகிதம் பண்ணினால் குரால் பசுவைக் கொன்ற தோஷத்திலே போவான் இதுக்கு விரோதம் பண்ணினாமாகில் பொன்னறக் கொண்டு மண்ணத விச்சுக் குடுத்தோம்

'ஒரு காசு ஒசத்தலும்' என்பதற்குத்தான் கல்வெட்டுச் சான்றுகள் இல்லை. டைரியும் சாசனமும் 18ஆம் நூற்றாண்டின் பேச்சு நடை யில் எழுதப்பட்டவையாகத் தோன்றுகின்றன. தமிழ் உரைநடை 2000 ஆண்டு கால வரலாறுடையதா யினும், பயன்படுத்தப்பட்ட துறைகள் புதிதாக இருக்கும் பொழுது, அது முதிர்ச்சி பெறாத நிலையில் எழுதப்பட்ட்து. என்றே கொள்ளவேண்டும்.

வாக்கியங்களை எப்படி அமைப்பது என்று அவர் களுக்குத் தெரியாது. கைப்பழக்கம் இல்லை. இலக்கண மும் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவு தான். ஏதோ பேசினது போல் எழுதிவிட்டார் என்று சொல்லுவோம்.

(செல்லப்பா)

இலக்கிய நடைக்கும் பேச்சு நடைக்கும் உள்ள வேறுபாடு குறைந்து, வரப்போகிற நாவல், சிறுகதை இலக்கியங்களின் நடைக்கு இது முன்னுருவமாகத் தோன்றுகிறது. வ. வே. சு. ஐயர் பாலபாரதியில் இந்த நடையைப் பற்றி ஒரு விமர்சனக் குறிப்பு எழுதியுள்ளார்.


இந்த தினசரியின் (டைரி), வாசகத்தைப் பற்றி ஓரிரண்டு வார்த்தைகள் சொல்லுவது முறையாகும். அது 33/3