பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

உரைநடை வளர்ச்சி


சம்ஸ்கிருத் தாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்து, ஆய்வுரையும் எழுதியுள்ளார். ஞானசாகரம் என்ற ஒரு பத்திரிகையையும் வெளியிட்டார். தமது நாட்குறிப்பை ஆங்கிலத்திலேயே எழுதி வந்தார். வீட்டுக் கணக்குகளையும் ஆங்கிலத்தில் எழுதி வந்தார்.

இவருக்குத் தமிழில் சம்ஸ்கிருதச் சொற்கள் பயின்று வருவது, தமிழின் இனிமைக்குக் கேடாகத் தெரிந்தது. புரியாத சம்ஸ்கிருதச் சொற்கள் மட்டுமன்று பண்டைத் தமிழ் நூல்களிலேயே கலந்து உருமாறித் தமிழாகிவிட்ட சொற்கள் கூடத் தமிழில் இருக்கக் கூடாது; அவை தமிழின் வளர்ச்சியைத் தடுக்கும் என்ற கொள்கையை முன்வைத்துப் பரப்பினார். தமது வேதாசலம் என்ற பெயரை மறைமலை அடிகள் என்று மாற்றிக் கொண்டார். ஞானசாகரம், அறிவுக் கடலாகிப் பின்னர் நின்று போயிற்று. தாம் முன்னர் எழுதிய கட்டுரைகளில் அளவுக்கு மீறிச் சம்ஸ்கிருதம் கலந்திருந்தார். அவற்றை எல்லாம் களையெடுத்துத் தனித் தமிழில் மாற்றி எழுதினார். இதனை ஒர் இயக்கமாகப் பரவச் செய்தார்.

அயல்மொழிச் சொற்கள் தமிழில் கலக்கக்கூடாது. அவ்வாறு கலப்பது இன்றியமையாததானால் அவற்றைக் குறிக்கும் தமிழ்ச் சொற்களை உருவாக்கிக் கலக்கவேண்டும். அதுவும் முடியாது போனால் அச்சொற்களைத் தமிழொலிப்படுத்திச் சேர்த்துக் கொள்ளவேண்டும்


என்பது இவர் கருத்து.

தமிழில் அறிவியல் தமிழில் அறிவியல், மானிடவியல், சமூகவியல், ரசாயனம், பெளதீகம், மார்க்சீயம் முதலிய புதிய துறைகள் அறிமுகமாகித் தமிழரின் அறிவு அகற்சியடையத் தொடங்கிய காலத்தில் இந்தக் கருத்துத் தமிழ்ப் புலவர்கள், பண்டிதர்களிடையே வேகமாகப் பரவியது. அறிவியல்களின் கருத்துக்கு முதன்மையில்லாமல், சொற்களைப் பற்றிய விவாதம் கிளம்பியது. எனவே தமிழில் இவற்றைக் கற்பிக்க இயலாது என்ற வாதமும் பலப்பட்டது.

தமிழர்களுக்குப் புதிய இயல்கள் தமிழ்நாட்டில் பரவும் பொழுது இவ்வியல்களே, தமக்குரிய சொற்களையும், பல மொழிகளிலிருந்து கொண்டு வந்து சேர்க்கும். இவை ஒவ்வொன்றிற்கும்.தமிழ்ச் சொல்லைப் பண்டைய இலக்கியங்களில் தேட முடியாது. பண்டைய இலக்கியங்கள் தோன்றிய காலத்