பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

உரைநடை வளர்ச்சி


வாக்கிக் கொள்ள விரும்பியது. மக்களைக் கவர்ந்து கொள்ளத் தீவிரமான பழமை எதிர்ப்புப் பிரச்சாரமும் பழமையின் பாதுகாவலர்களான பிராமணர்களின் சமூக வேறுபாட்டுக் கொள்கைகளை மிக்க ஆவேசத்துடன் தாக்குகிற ஓர் இயக்க மும் அவர்களுடைய வர்க்க நலனுக்குத் தேவையாக இருந்தது. இவ்வியக்கத்தின் தலைமை நிலப்பிரபுத் துவப் பகுதிகளிடமே இருந்தது. அப்பகுதிகள் பிராமணர் அல்லாத மேல் வகுப்பினராக இருந்தனர்.

அவர்களுடைய கோரிக்கைகளில் ஆர்வமில்லாத சாதா ரணத் தமிழ் மக்கள் சாதி வேறுபாடுகள் காரணமாக மிகவும் இழிவுபடுத்தப்பட்டிருந்தனர் அவர்களுக்குச் சாதி இழிவை எதிர்த்துப் போராடுவதில் அக்கரை இருந்தது. இதனைப் பயன்படுத்திக் கோண்டு தங்கள் கோரிக்கைகளுக்குப் பொதுமக்கள் ஆதரவைத் திரட்டுவதில் நிலப்பிரபுத்துவப் பகுதிகள் ஈடுபட்டன. ஈ.வெ. ராமசாமிப் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் தொடக்கக் காலத்துக்கு முன்பு நீதிக் கட்சியினுடைய அரசியல் நோக்கு இதற்குத் துணையாக இருந்தது. பின்னர் சுயமரியாதை இயக்கம் ஒரு சுதந்தரமான, சமூக ஆதிக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிற ஓர் இயக்கமாக மலர்ந்தது. இதற்கு நேரடியாகத் தலைமை தாங்காமல் நிலப்பிரபுத்துவப் பகுதிகள் தீவிரக் கருத்துக்கள் கொண்ட ஈ.வெ.ரா.வைத் தலைவராக ஏற்றுக்கொண்டன.

ஈ.வெ.ரா. அதிக எழுத்தறிவில்லாத் பொதுமக்களைச் இல சமூக ஆதிக்கக் கருத்துக்களுக்கு எதிராகத் திரட்ட முயன்றார். எனவே, அவர் மொழியை ஆதிக்க எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தினார். பொதுமக்களிடையே தமது கருத்துக்களைப் பரப்புவதற்காக அவர் மேடைகளில் பேச்சு மொழியைக் கையாண்டார். எழுத்தைப் பிரச்சாரத்துக்காகக் கையாளுகிறபோது அவர் பேச்சுக்கு மிகவும் நெருங்கிய தமிழ் மொழியைக் கையாண்டார். தமிழ் இலக்கியப் பயிற்சியோ, அதற்கொரு மதிப்போ அவர் உள்ளத்தில் இல்லாததால் அவர் கொச்சை மொழியைத் திருத்தவே முயன்றதில்லை. தமிழ் ஒரு இமிராண்டி மொழி என்று அவர் கூறியது தற்செயலான ஒன்றல்ல.

ஈ.வெ.ரா.வின் நாத்திகவாதத்திலும் சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களிலும் சோவியத் ஆதரவுப் பிரச்சாரத்திலும் மக்கள் ஆதரவு திரட்டப்பட்டது. திராவிட இயக்கம் இப் பொழுது மக்களின் இயக்கம் மட்டுமன்று. தமிழ் கற்ற மறைமலையடிகள் போன்றோரது ஆதரவு பெற்ற இயக்க