பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.வானமாமலை

53


யன்றிச் சிறந்த இலக்கியப் படைப்புக்களை இந்நடையால் உருவாக்க இயலவில்லை.

சினிமாவில்கூட இந்நடை வெற்றி காணவில்லை. பேச்சு நடையே சினிமாவில் பாத்திரங்களின் இயல்பான உரைநடைகளில் பயன்படுத்தப்படுகின்றது. ரொமாண்டிக் பாணியில் சினிமா சென்றபோது அடுக்குத் தொடர் நடை சிறிது கவர்ச்சியாக இருந்தது. இப்போது ரியலிசம் வெற்றிபெறும் காலத்தில் பாத்திரங்களின் சமூக நிலையில் இயல்பாக வருகிற பேச்சு நடைதான் அப்பாத்திரங்களைப் பூமியில் உலவும் பாத்திரங்களாகக் காட்டுகின்றது.

எனவே செயற்கையான தி.மு.க. நடை இப்போது இலக்கியம், சினிமா முதலிய துறைகளில் எடுபடுவதில்லை.