பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.வானமாமலை

55


மிகச் சிலருக்காக எழுதியவர்கள் இப்பொழுது ஆயிரக் கனக்கானவர்களுக்கோ, லட்சக் கணக்கானவர்களுக்கோ எழுதவேண்டும். வாசகர்களது உணரும் நிலை, அறிவுநிலை, அவனது சமூகச் சூழல் இவை பலதரப்பட்டவை.

வாழ்க்கையின் படைப்பான இலக்கியம், வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புகொண்டது. இலக்கியம் என்ற முறையில் தனியான வளர்ச்சிப்போக்கு விதிகளும் கொண்டது. தற்கால இலக்கியங்களை, இலக்கியமே இல்லை என்று சொல்லுகிறவர்களும், தற்கால இலக்கியத்தை அதன் பரப்பிலும் ஆழத் திலும் ஆய்வு செய்யாமல் சுருக்கு வழிகளில் தம் மனம் போன போக்குக்கேற்றபடி ஆய்வு செய்கிறவர்களும் தமிழின் வளர்ச்சிப்போக்கை இயக்குபவர்களாயிருக்கிறவரை, இவர்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு, வளர்கிற தற்கால இலக்கியமும் தமிழ்நடையும் பல்கலைக்கழகங்களுக்குள் நுழையாது.

ஆனால், நமது பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்கள், மொழியியல் மாணவர்கள் நவீன இலக்கியத்திலும், stylystic பிரச்சினைகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அமெரிக்க மாணவர் ஒருவர் '150 ஆண்டு தமிழ் நாவல்' என்ற பொருளில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஃபூர்ணிக்கா என்ற ரஷியர் ஜெயகாந்தன் பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளார். பொன்னிலனின் கரிசலை ரஷ்யனில் மொழிபெயர்த்து வருகிறார். இங்கிலாந்தில் சில ஆய்வாளர்கள் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் இவர்களைப் பற்றி ஆராய்கிறார்கள். அயல்நாடுகளின் இலக்கியவாதிகள் தமிழ்ப் படைப்புகளை ரசித்த பின்னர்தான் தற்கால-வளரும் தமிழ் இலக்கிய ஆர்வம் தமிழகப் பல்கலைக்கழகங்களுக்குள் புயலடித்து வீசும் என்று எதிர்பார்க்கிறோம். அவ்வாறு தற்காலத் தமிழிலக்கிய ஆர்வம் பெருக்கெடுத்துப் பாயும்போதுதான் தரமான இலக்கிய ஆய்வுகள் பல்கலைக்கழகங்களால் நடத்தப்பெறும்.

தற்கால எழுத்தாளர்களை இரு வகைப்படுத்தலாம்.

கற்பனையை ஆதாரமாகக் கொண்டு புனையப்படும் ஒரு நிஜம் போன்ற தோற்றமான வாழ்க்கை அனுபவ உணர்ச்சி வெளியீடுதான் கதை. இதில் வரும் கற்பனை, புனைதல், உணர்ச்சி வெளியீடு, வரலாறு ஆகிய இத்தனை தன்மைகளையும் தன் மனத்தில் தோன்றியபடி பிறரிடம் தொற்ற வைப்பதற்கு ஒரு படைப்பாளி கையாளும் சாதனம் பாஷை அதில் ஒரு அம்சம் உரைநடை. கதைக்கு வேண்டிய மூலப்பொருள்களான சாமான்கள், செயல்கள், மனிதர்கள் ஆகிய மூன்றுடன், உணர்ச்சி, அறிவு என்ற