பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

உரைநடை வளர்ச்சி


பொருளாதார, நிலப்பிரபுத்துவ சக்திகளை எதிர்த்து நடத்திய போராட்டம். அவர்கள் ஒன்றுபடுவதற்கு ஒரு கொள்கைத் தொகுதியும், ஒரு பரம்பரை வரலாறும் தேவை. ஏனெனில் இந்தச் சாதியாரை ஒன்றுபடுத்த ஒரு சமூக அமைப்போ, அரசியல் அமைப்போ அப்போது இல்லை. எனவே புதிதாக வந்த கிறிஸ்தவ சகோதரக் கருத்துக்களையும் நாடார் மக்களின் பரம்பரையான கதை களையும் இணைத்து சமய வரம்பிற்குள் போராட்டம் தொடங்கினார்கள்.

(ஆராய்ச்சி-13, ப. 73)

கா. சுப்பிரமணியன், தமது ஆற்றுப்படை என்னும் கட்டுரையில் ஆற்றுப்படை என்னும் புறத்திணை பற்றி எழுதுகிறார்:

ஆற்றுப்படை இலக்கியம் ஆரம்ப் காலத்தில் இனக் குழுத் தலைவர்களிடம் கலைஞர்களை வழிப்படுத்தியது. இனக்குழுத் தலைவர்கள் கலைஞர்களோடு கலந்து பழகினர்; உண்டனர், குடித்தனர், ஆடிப்பாடி மகிழ்ந்தனர். சங்க காலத்தில் நிலவுடைமை வளர்ச்சியும், இனக் குழுக்களின் அழிவும் நிகழ்ந்தன. அரசு என்னும் இயந்திரம் தோன்றியது. இக்காலத்தில் ஆற்றுப்படை இலக் கியம் கலைஞரை வேந்தர்களிடம் வழிப்படுத்தியது. வேந்தர்கள் இனக்குழுத் தலைவரைப் போலக் கலைஞர்களிடம் பேதமின்றிப் பழகவில்லை. ஆகவே வேந்தர் காலத்தில் முன்னோர் வள்ளன்மையைப் புகழ்வதும் கொடாதவனை இகழ்வதும் (அவர்கள் பாடல்களில்) காணப்படுகிறது.

இவ்விரண்டு ஆற்றுப்படை இலக்கியமும் இம்மைப் பயன்களை, அதாவது உணவு, பரிசில் போன்றவற்றைப் பெற்று வாழவே வழிகாட்டுகின்றன.

(ஆராய்ச்சி 14, ப. 146)

ராஜாராமனின் இயல்புத் தொகுதி பற்றி எஸ். தோதாத் திரி எழுதுகிறார்: ராஜாராமன் ஒரு அப் நார்மல் கதாபாத்திரம். அவனை அறிமுகப்படுத்தும்போது ஆசிரியர் (ஜெயகாந் தன்) கூறுகிறார். "ஸைகோ அனாலிஸிஸின்படி பார்த்தால் இந்த ஜயராமன் ஒரு அப்நார்மல் கேஸ். ரிஷி மூலத்தின் கதாநாயகனாக ராஜாராமன் ஜெயகாந்தனின் முழுமையான பிராய்டிஸ் கதாபாத்திரம். பிராய்டு பேசக் கூடிய 'ஒடிப்பஸ் காம்ப்ளெக்ஸ்' வகையைச் சார்ந்தது. ஐந்து வயதுச் சிறுவனாக இருக்கும்பொழுது அவன் தாய்