பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.வானமாமலை

59


(அவன்)தனியறையில் இருப்பதைக் காண்கிறாள். அவனுக்குப் பத்து வயதாகும்போது தாயை நிர்வாணமாகக் காண்கிறான். பின்பு அவள் அவனை கனவில் திருப்திப் படுத்துகிறாள். நனவுலகில் வேதசாஸ்திரங்களைக் கற்று ராஜாராமன் (வேத சாஸ்திர வல்லுனனாக) அறிவாளியாக விளங்குகிறான். சாரதா மாமியிடம் தன் தாயின் சாயலைக் கானும் அவன் அவளோடு பாலுறவு கொள்ளுகிறான். ஆனால், அவன் கல்வியும், சமூகமும் (இச்செயலுக்காக) அவனைக் கண்டிக்கும் என்பதால், (சமூகத்தில் இருந்து பிரிந்து சென்று) துறவு பூண்டு வாழ்கிறான். இது பிராய்டிஸ் டைப் ஒன்றுக்கு கற்பனை உதாரணமாகத் தோன்றுகிறது.

இங்கு ஆசிரியர் பிராய்டிஸம், ஒடிஸ் காம்ப்ளெக்ஸ், அதன் விளைவு இவற்றை ராஜாராமன் என்ற கதாபாத்திரத்தை எடுத்துக்கொண்டு விளக்குகிறார். ஆங்கிலச் சொற்களைக் கொண்டு சில புதிய கருத்துக்களைத் தெளிவாக்குகிறார். இக்கருத்துக்கள் பிராய்டினால் உருவாக்கப்பட்டவை. அவரே கிரேக்கப் புராணக் கதைகளில் இருந்து சில மனவியல் போக்குகளுக்குப் பெயர்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார். அப்பெயர்களையே தமிழிலும் கையாளுவது பொருத்தமானது தான். ஆனால் டைப், காம்ப்ளெக்ஸ், ஸப்ளைமேஷன் என்ற சொற்களுக்குத் தமிழிலேயே உளவியல் சொற்களைப் புனைந்து கையாண்டிருக்கலாம். காரணத்தோடு பிற மொழி களிலிருந்து புனையப்பட்ட சொற்களை அவ்வாறே பயன்படுத்துவதுதான் சரியானது. எல்லா மொழிகளுக்கும் பொது வான உணர்ச்சிகள், வகைப்பாடுகள் ஆகியவற்றிற்குத் தமிழிலும் சொற்களஞ்சியம் உருவாகவேண்டும். பி.எல். சுவாமி, பண்பாட்டு மானிடவியல் கட்டுரைகளை மிகத் திறமையாக எழுதுகிறார். அவர் ஆராய்ச்சியில் எழுதிய 'தாய்த் தெய்வ வணக்கம்’ என்ற கட்டுரை நூல் வடிவில் வெளிவந்துள்ளது. புதிய கருத்துக்களைக் கூற எளிமையும் நுட்பமும் வாய்ந்த நடையை அவர் உருவாக்கியுள்ளார். இதற்கு முன் தமிழில் ஆராய்ச்சிப் பொருளாக இல்லாத புதிய துறைகளில், பண்பாட்டு, மானிடவியல், சமூகவியல், மொழியியல் முதலிய துறைகளில் சொற்களஞ்சியங்களை உருவாக்குவதும், தர்க்கரீதியாகக் கருத்துக்களை விளக்க ஒரு நடையை உருவாக்குவதும் புதிய முயற்சிகள் இம்முயற்சியில் பி.எல்.சுவாமி, நா. வானமாமலை, ஆர் பெரியாழ்வார், எஸ்.வி.சண்முகம் முதலிய ஆய்வாளர்கள் பங்குப் பணியாற்றியுள்ளார்கள்.