பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

உரைநடை வளர்ச்சி


தமிழைப் பேசுகிறவர்கள் மொழியில் வேறுபாடுகள் குறையும் என்றுதான் சொன்னேன்.

பல பகுதிகளில் வாழும் பல சாதிகளைச் சேர்ந்த மக்கள், அழுத்தமும் உயிர்த்துடிப்பும் மிக்க சொற்களை உருவாக்கிப் பயன்படுத்தி வருகிறார்கள். அவற்றை நீக்கிவிட்டு ஒரே சொல்லைப் பயன்படுத்த திர்ப்பந்திக்க முடியாது. அவையே தமிழகம் முழுவதிலும் ஏற்றுக்கொள்ளப்படும்படி பரப்பப்பட வேண்டும், சி. ராஜநாராயணன், பொன்னிலன், வீர. வேலு சாமி இவர்கள் நெல்லை, கன்னியாகுமரிப் பேச்சுத் தமிழ் தடையை, உரையாடல்களில் பயன்படுத்துகிறார்கள். அப்பேச்சை standard Tamil இல் எழுதினால் பாத்திரங்கள், உயிருள்ள மனிதர்களாக இல்லாமல் கற்சிலைகள் ஆகிவிடும். இது போன்றேதான் கொங்கு நாட்டு வழக்கு, சென்னை வழக்கு, தஞ்சை வழக்கு முதலியன.

ஒரு Standard Tamil பேச்சு வழக்கு நடை, இலக்கியப் பயன்பாட்டின் மூலமும் நகரங்கள் கூடி வாழ்கிற வாய்ப்பு ஏற்படுவதன் மூலமும் படிப்படியாக உருவாகும். வட்டார மொழியே இல்லை என்று எனது நண்பர்கள் கூறுகிறார்கள். இதற்குக் காரணம் தொழில் வளர்ச்சியும் புதிய நாகரிகங்களுக்கு மக்கள் நகர்வதும்தான். கடந்த 50 ஆண்டுகளில், வளர்ந்து வந்துள்ள இலக்கியத் தேவைகளுக்கும் கருத்து விளக்கத் தேவைகளுக்கும் ஏற்றாற்போல், முதலில் தட்டுத் தடுமாறியும், பின்னர் வலிவு பெற்று உறுதியாகவும், தமிழ் தடை வளர்ந்து வருகிறது. இன்னும் பல அறிவியல் துறைகளில் அது காலடியெடுத்து வைக்கவில்லை.

அது உலகின் அறிவியல் துறைகளினுள்ளெல்லாம் நுழைந்து, உலக அறிவியல் அறிவைத் தமிழனுக்கு அளிக்க வேண்டும். அதற்குரிய முறையில் தமிழ்ப் படைப்பாளியும் ஆராய்ச்சியாளனும், பேச்சுத் தமிழில் இருந்து தமக்குத் தேவையான நடைகளை உருவாக்குவார்கள்.

பல்வேறுபட்ட உணர்ச்சி வெளியீட்டு இலக்கிய நடையையும் நுட்பமான அறிவு விளக்க நடையையும் மக்கள் எழுத்தறிவு பெற்று, படிப்பு ஆர்வம் உண்டாகும்பொழுது, அவர்களிடையே தோன்றி வளரும் எழுத்தாளர்கள் உருவாக்குவார்கள். இப்போக்கில் தமிழ் நடை வலுவுடன் முன்னேறும்.