பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பதிப்புரை

பொருளாதார-அரசியல்-பண்பாட்டுப் போக்குகளின் வெளிப்பாடு அது. இந்த வெளிப்பாடு உருவாக்கும் தேவைகளின் பயன்பாடு அது. தேவையும் தேவைக்கேற்ற பயன்பாடும் இல்லையெனில் ஒரு மொழி வளர்ச்சி பெறுதற்கான வாய்ப்புகளை இழந்துவிடும்.

ஒவ்வொரு சமூக-பொருளாதாரக் கட்டமைப்பிலும், அதன் தேவைகளுக்கேற்பத் தமிழ் மொழி இயல்பானஇயற்கையான வளமும் வளர்ச்சியும் பெற்றிருந்தது உண்மை தான். இருந்தாலும், இடைக்காலத் தமிழ் நாட்டில் ஏற்பட்ட அறிவியல், தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகளின் தாக்கம் தமிழ் உரைநடையில் காணப்படவில்லை. இலக்கியம், இலக்கணம், உரை, தத்துவம், சமயம், ஆட்சியியல் போன்ற துறைகளில் தமிழ் உரைநடை பயன்படுத்தப்பட்டவாறு இந்த அறிவியல், தொழில்நுட்பத் துறைகளில் உரைநடை எழுத்துருவம் கொள்ளவில்லை.

கட்டடம், நீர்ப்பாசனம், சிலைகள் வார்ப்பு, மருத்துவம், போர்க் கருவிகள் போன்ற பல துறைகளில் தமிழ் நாட்டில் ஏற்பட்டிருந்த முனைப்பும் முன்னேற்றமும் தமிழ் உரைநடையாக உருவாக்கம் பெறவில்லை. இத்தகைய அறிவு சார்ந்த, துறைகளின் ஆற்றல், பட்டறிவுப் பகிர்ந்து கொள்ளுதலாகக் கற்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டதேயன்றி, எழுத்தில் பதிவு செய்யப்பட்டுக் கற்பிக்கப்படவில்லை. இதற்காகப் பயன்பாட்டில் இருந்த வாய்மொழி நடை, எழுத்து நடையாக ஏடேறவில்லை.

தன் காலத்துக்குத் தேவையான உரைநடையை உருவாக்கிக் கொள்கின்ற தன்மை கொண்டதாக இருந்திருக்க வேண்டிய தமிழ், இடைக்காலத்திலேயே இதைச் செய்யத் தவறிவிட்டது. அறிவியல்-தொழில்நுட்ப மொழியாகத் தமிழ் பெற்றிருக்கவேண்டிய வளர்ச்சியின் முளைகள் இடைக்காலத்திலேயே முடக்கப்பட்டுவிட்டன. ஒரு மொழியைத் தொடர்ந்து இடைவிடாமல் பயன்படுத்தும்போதுதான் அது புதிய சொற்களை உருவாக்கிக் கொண்டு நெகிழ்ச்சியும் இயைபும் பெற்றுச் செழுமையடைகிறது.

தொடக்க நிலையில், புதிய துறைகளில் மொழி அமைப்பு பண்பட்டதாகவும், சொல்ல வேண்டியவற்றை எளிமையாக தெளிவாக வெளிப்படுத்துவதாகவும் முழுமை பெறவில்லை. என்பது உண்மைதான். புதிய பொருள்களுக்கு ஏற்ற பொருத்தமான தமிழ்ச் சொற்கள் உடனடியாக உருப்பெற்று விடவில்லை. பத்தொன்பதாவது நூற்றாண்டிலும், இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வெளியான நாவல்