பக்கம்:உறவுக்குக் கை கொடுப்போம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 நண்பர் ஜேம்ஸ் அவர்கள் வரவு செலவுத் திட்டத்தில் 2 கோடியே 56 இலட்சம் துண்டு விழும் என்று எதிர்பார்க்கப் பட்டது என்று கூறி, தற்போது 15 கோடி அளவிற்குத் துண்டு விழும் என்று கூறப்படுகி றது. இதற்கான காரணங்கள் சரியில்லை; விற்பனை வரியின் கீழ் 40 கோடி ரூபாய்க் கூடுதல் வருவாய் வந்திருக்கிறது என்றெல்லாம் சொன்னார்கள். அவர் சொன்னதில் சில புள்ளிகள் தவறாக இருந்தாலும் அதாவது 15 கோடி என்பதை 11 கோடி என்றும், 40 கோடி என்பதை 36 கோடி என்றும் றும் மாற்றிக் கொள்ள வேண்டும்; அவருடைய வாதம் என்னவென்றால் இப்படி விற்பனை வரி 36 கோடி வந்திருக்கும்போது, இரண்டு கோடி ரூபாய் எப்படி 11 கோடியாக உயர்ந்தது என் று வாதிட்டார். அதற்கு நான் அளிக்கின்ற பதில், விற்பனை வரியில் 36 கோடி ரூபாய் நமக்கு உயர்வு ஏற்பட்டது; மற்ற துறைகளில் நமக்குக் கொஞ்சம் அதிகமாகவே வரவினங்கள் கிடைத்தது என்றா லும், வரவினங்களில் ஏற்பட்ட குறைவுகளை நாம் மறந்து விடக் கூடாது. மத்திய அரசிடமிருந்து மத்திய அரசு போடுகின்ற வரிகளிலேயிருந்து, ற நாம் திர்பார்த்த பங்கில் ஏறத்தாழ 12 கோடி ரூபாய் குறைந்திருக்கிறது. வட்டி வரவுகளில் அரசு தந்துள்ள கடன்களுக்கு வரக்கூடிய வட்டி வரவுகளில், ஏறத்தாழ 14 கோடி ரூபாய் குறைந் திருக்கிறது. மத்திய அரசிடமிருந்து 150 கோடி ரூபாய்க்கு திட்டத்திற்காக நாம் வாதிட்டு, கிடைத்திருக்கிற தொகை போதாது, மேலும் தர வேண்டுமென்று 15 கோடி ரூபாய்க்கு அவர்களிடம் வாதிட்டுக் கொண்டிருக்கிறோ ம். 11 கோடி வள க் கு யாவது வருமென்று எதிர்பார்த்தோம். வரவில்லை. இப்படி இந்த வரவினங்கள் குறைந்தது மாத்திரமல்ல; செலவினங் களும் உயர்ந்துவிட்டது. கல்வித் துறையில் நான்கு கோடி ரூபாய்; மருத்துவத் துறையில் ஏறத்தாழ ஒரு கோடி ரூபாய்; வறட்சித் துயர் தணிப்புப் பணிகளுக்காக எட்டரைக் கோடி ரூபாய்க்கு மேல் அதிகச் செலவு, வேளாண்மைத் துறையில் ஏறத்தாழ 2 கோடி அதிகச் செலவு; பாசனத் துறையில் நான்கு கோடியே முப்பது இலட்சம் ரூபாய் உயர்ந்திருக் கிறது; சாலைகளில் 2 கோடியே ரூபாய் அளவிற்கு உயர்ந்திருக்கிறது. 76 இலட்ச அதைத் தவிர வறட்சிப் பணிகளுக்காக லுகையை நாம் அளித்தோம். அதிலும் நமக்கு வர டிய வருவாய் குறைந்திருக்கிறது. 'இந்தக் காரணங் களால் தா ன் இரண்டு கோடி ரூபாய் என்று எதிர்பார்க்கப் பட்ட துண்டு விழும் நிலைமை 11 கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்தது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். வரிச் ச வேண் . று ம் 14 சத்தியவாணிமுத்து அம்மையார் அவர்கள் பேசிய நேரத்தில், பின்தங்கிய வகுப்பினருக்காக ஒதுக்கப்பட்ட 3.97 கோடி ரூபாயும், மலை சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட லட்சம் ரூபாயும் மத்திய அரசின் வற்புறுத்தலாலேயே ஒதுக்கப்பட்டது என்றும், மத்திய அரசு இந்த அளவிற்கா வலியுறுத்தாவிட்டால், நிதி ஒதுக்கீடு மிகக் குறைந் திருக்கும் என்று குறிப்பிட்டார்கள். அந்த நேரத்தில் தான் வது