பக்கம்:உறவுக்குக் கை கொடுப்போம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 தன்னுடைய நிதி நிலை அறிக்கையைச் சமர்ப்பிக்கிறது. றது. இந்தி யாவிலேயே அப்படிப்பட்ட ஒரேயொரு மாநிலம் தமிழ்நாடு தான்" என்று மகிழ்ச்சி பொங்க இங்கே குறிப்பிட்டார். 1967 -இல் பல மாநிலங்களில் எதிர்க் கட்சிகளின் ஆட்சியினை வாக் காளப் பெருமக்கள் ஏற்படுத்தியபோதிலும், என்ன காரணத் லோ தாமோதரன் குறிப்பிட்டதைப் போல, மத்திய அர சின் தாக்குதல் காரணமாகவோ, மாநில அளவிலே உள்ள கட்சிகளின் சூழ்ச்சிகளின் காரணமாகவோ ஓரிரு ஆண்டுகளில் பல மாநிலங்களின் எதிர்க் கட்சி ஆட்சிகள் கவிழ்ந்துவிட்டன என்றாலும், தமிழ் நாடு ஒன்றில் தொடர்ந்து இரண்டு பொதுத் தேர்வுகளில் வெற்றி பெற்று எட்டாண்டுகளைக் கடந்து ஒன்ப தாவது ஆண்டி டி லே அடியெடுத்து வைத்து ஒரு மாநிலக் கட்சி, எதிர்க் கட்சி தி.மு. கழகம் ஆண்டு கொண்டிருக்கிற பாங்கினைக் காண்கிறோம். தை தி.மு. கழகத்திற்கு மாத்திரம் பெருமையாக எடுத்துக் கொள்கிறோம் என்று கருத வேண்டாம். தோழ மைக் கட்சிகளுடைய நல்ல எண்ணம் பொதிந்த அந்த உற வோடுதான் கழக ஆட்சி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த ஒன்பதாவது ஆண்டில் அடியெடுத்து ல் வைத்திருக்கு ம் நேரத்தில் இந்த அவையில் பேசிய தலைவர்கள் குற்றங்குறை களைச் சுட்டிக் காட்டவும் தவறவில்லை; அதே நேரத்தில் நல்லவைகளைப் பாராட்டவும் தவறவில்லை என்பதை எண்ணு கிற நேரத்தில் நான் அவர்களுக்கெல்லாம் என்னுடைய நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்க் கட்சித் தலைவர் இந்த வரவு செலவுத் திட்டத் தில் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன என்ற ஒரு குற்றச்சாட்டைச் சொன்னார். சமுதாய நலதிட்டம் என்கிற தலைப்பின் கீழ் செலவிட ந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 180 இலட்சம் ஒதுக்கப்பட்டிருந்தது; திருத்த மதிப்பீட்டில் 148 இலட்சம் ஒதுக்கப்பட்டிருந்தது; வரும் ஆண்டில் 98 இலட்சம்தான் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களையும் அவர் இங்கே சொன்னார். உள்ளூர் மேல் வரி மீது ஈட்டு மானியம் தர 1974-75 வரவு செலவுத் திட்டத்தில் ஏழு கோடி ஒதுக்கிய தற்குப் பதிலாக 74-75 திருத்த மதிப்பீட்டில் 10.46 கோடி யாக உயர்த்தியிருக்கிறோம் என்பதை கணக்கில் எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு நாம் பணத்தைக் குறைத்துவி டோம் என்கிற குற்றச்சாட்டு வராது. பொதுவாக, சில சில பகுதிகளில் நாம் சற்றுக் குறைவாக கிராமங்களுக்கு ஒதுக்கியிருக்கிறோம் என்றாலும், இந்த ஆண்டு சிறப்பாக வறட்சி நிவாரணப் பணிகள் அனைத்தும் கிராமங் களைச் சுற்றிச் சுற்றித்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின் றன. இந்த நடப்பு நிதியாண்டில் 12 கோடி ரூபாயும்,அடுத்த ஆண்டு ஏறத்தாழ 20 கோடி ரூபாய்க்கு மேலேயும், நாம் வறட்சிப் பணிகளுக்காக கிராமங்களில்செலவிடவிருக்கிறோம். இதைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் கிராமங்களைப் புறக்கணித்து விட்டோம் என்று கூறுவதற்கு யலாது. 30