பக்கம்:உலகத்தமிழ்.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விண்ணிலே தமிழ்

11

அங்கு நாற்பத்தைந்து நிமிடங்கள் தங்கல். தில்லியில் இந்தியப் பேரரசின் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருக்கும் டாக்டர் கரன்சிங் அவர்கள் விமானமேறி ஞர்கள். கன்னியாகுமரியும் காசுமீரமும் இணைந்து செல்வதாக இருந்தது இந்நிகழ்ச்சி. பிறகு அங்கிருந்து விமானம் டெஹ்ரானுக்குப் புறப்பட்டது.

“இருபத்தொன்பதாயிரம் அடியில் எண்ணுாற்று அறுபது கிலோ வேகத்தில் பறக்கிறோம். 2,660 கிலோ தூரத்திலுள்ள டெஹ்ரானுக்குப் போய்ச் சேர மூன்று மணி இருபது நிமிடம் ஆகலாம். விமானம் பாகிஸ்தானிலுள்ள முல்டான், ஆப்கானிஸ்தானத்திலுள்ள காந்தாரம் ஆகிய நகரங்களின் மேல் பறந்து சென்று டெஹ்ரானைச் சேரும்,” என்று விமானயோட்டி அறிவித்தார்.

முல்டான் என்றதும் முதலில் தமிழ் பாட்டில் பல நகரங்களில் வந்து வட்டித் தொழில் நடத்தும் மூல்தானியர் நினைவிற்கு வந்தனர். வருவாய்க்கேற்பச் செலவைக் கட்டுப்படுத்தத் தெரியாது தவிக்கும் தமிழரை நினைந்து ஏங்கினேன்.

ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை

என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் வள்ளுவர் கூறிய அறிவு விதை இன்னும் எத்தனை காலத்திற்கு முளைக்காதிருக்குமோ என்று வருந்தினேன். கவலைக் காரிருளில் மின்னல் பளிச்சிட்டது.

குருநானக் மூல்டான் நகருக்குச் சென்ற நிகழ்ச்சி நினைவிற்கு வந்தது. அவர் சென்றபோது மூல்டானில் சமயத் தலைவர்கள் பலர் இருந்தனர். குருநானக்கின் வருகை அவர்களுக்குப் பிடிக்கவில்லை. எனவே சீடர்கள் லம் கோப்பை நிரம்பப் பாலை அவருக்கு அனுப்பி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/10&oldid=481936" இலிருந்து மீள்விக்கப்பட்டது