பக்கம்:உலகத்தமிழ்.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம் பொறுப்பு

83

அறிஞர் டாக்டர் கெல்லர், இலங்கைத் தமிழர் டாக்டர் சிவஞான சுந்தரம், திரு தெ. பொ. மீ., திரு ம. பொ. சி., திரு கி. வா. ஜ. ஆகியோர் அருமையாகப் பேசினார்களாம். எதிர்பார்க்கக் கூடியதே, அங்கு மேனாட்டு அறிஞர்கள் கூட தமிழில் உரையாற்றினர்களாம். இவற்றையெல்லாம் கேட்டு மகிழும் வாய்ப்பினை இழந்து விட்டேன். ஏன்?

அதே கட்டடத்தில், அதே நேரத்தில் கடந்த— சென்னையில் நிறுவ இருக்கும் அனைத்து நாடுகளின் தமிழ்க் கல்விக் கழகத்தின் ஆலோசனைக் குழுக் கூட்டத் தில் கலந்து கொள்ள வேண்டியவனாகிவிட்டேன். அந்த ஆலோசனைக்குழுக் கூட்டத்திற்காகவே நான் பாரிசுக்குச் செனறது. அக் குழுவில் பலரும் இருந்தனர். முதல் இரண்டாண்டுகளில் புதிதாக அமைக்கப் போகும் தமிழ்க் கழகம் ஆற்ற எண்ணியுள்ள வேலைத் திட்டத் தைப்பற்றிக் கடுமையான வாதம். ஒரு நிலையில், தமிழைத் தொடங்குவதற்குப் பதில் வேறு துறையைத் தொடங்கி விடுவார்களே என்ற அச்சம் கூட ஏற்பட்டது. பல நாட்டவர் கூடும்போது ஆளுக்கொரு பக்கம் இழுத்தல் சாதாரணம். அதன் விளைவாகச் சில வேளை, ‘பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிவதுமுண்டு.’ அத்தகைய ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டது தமிழ்க் கல்விக் கழகம். தமிழ் மொழித் திட்டத்திலே தொடங்கி, பிறகே சமூக இயல், வரலாறு, தொல் பொருள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளலாமென்ற முடிவுக்குத் கொண்டு வரப் பெரும்பாடுபட வேண்டியிருந்தது.

மாணவர் தமிழ்மன்றத்தில் நானும் பேசுவதாக அறிவித்திருந்தார்கள். ஆலோசனைக் குழுவிலிருந்த எனக்கு ஒரு முறைக்குமேல் அழைப்பு வந்தது குழுவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/100&oldid=481251" இலிருந்து மீள்விக்கப்பட்டது