பக்கம்:உலகத்தமிழ்.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

உலகத் தமிழ்

கலப்புக் திருமணம், சமூக முன்னேற்றம் ஆகியவை பற்றி இருந்தனவாம். இவை கதைக்கு வற்றாத ஊற்றல்லவா?

சென்ற ஆண்டு காந்தி நூற்றாண்டு அல்லவா? அவ் வாண்டில் சிலராவது காந்தியை நினைத்தார்களாம். சிலருக்குக் காந்தியம் - சிறு கதைகளுக்கு உடலாக உதவிற்றாம். லாட்டரிச் சீட்டால் விளையும் கேடுகளைப் பற்றியும் சிலகதைகள் வந்தனவாம்.

மனிதர்கள் பால் அன்பு, கீழ்ப்படிதல், தியாகம் ஆகியவற்றைப் பல கதைகள் போதித்தனவாம். கதையை முடிப்பதற்குத் தற்கொலை கைகண்ட மருந்தாக இருந்ததாம் பலருக்கு.

கடவுள் நம்பிக்கை எவ்வளவு இடம் பெற்றது இக் கதைகளில்? இதை ஒருவர் ஆராய்ந்தாராம். ஆத்திகர் அதிர்ச்சி அடைய வேண்டாம். இருநூறு சிறுகதைகளை வெளியிட்ட ஒரு வார இதழ் 9 கதைகளில் கடவுளைப் பொதுவாக இழுத்ததாம். அதே இதழ், ஒரே ஒரு கதையில் மட்டுமே கடவுளை மையமாக வைத்ததாம். எல்லா வார இதழ்களிலும் வந்த 725 சிறுகதைகளில் 43ல் மட்டுமே கடவுள் கம்பிக்கையை அடிப்படையாக வைத் துள்ளனராம். 122 கதைகளில் கடவுள் பற்று பொதுவாக வருகிறதாம். இப் பத்திரிகையாளர்கள் யாரும் நாத்திகர் அல்லர் என்பதை நினைவு படுத்துகிறேன். அது எப்படியோ போகட்டும்.

பெரும்பாலான சிறுகதைகளில் கருத்துச் சிறப்போ, உணர்ச்சி உயர்வோ இல்லையாம். பொழுது போக்க மட்டுமே பயன்படுபவை பலவாம். இக் கதைகளில் தேவைக்கும் அதிகமாகப் பிறமொழிச் சொற்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/103&oldid=481255" இலிருந்து மீள்விக்கப்பட்டது