பக்கம்:உலகத்தமிழ்.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இதழ்களின் தமிழ்ப் பணி

105

கையாளப்பட்டதைச் சுட்டிக்காட்டி வேதனைப்பட்டது - மறைத்திரு. ஞானபபிரகாச அடிகளாரின் தமிழ் உள்ளம். பல இதழ்கள் மொழித் துய்மையைப் பொருட்படுத்து வதே இல்லையாம்! இருபது ஆண்டுகளுக்கு முன் எல்லோருக்கும் தெரிந்திருந்த வடமொழிச் சொற்கள் இப்போது பெரும்பாலோருக்குப் புரியாதனவாக உள்ளன. அதை அறியாது பழைய வடமொழிச் சொற்களைப் பெய்வதிலேயே சிலர் மகிழ்ச்சியடைகிறார்களாம். பிற மொழிச் சொற்களை அப்படியே இறக்குமதி செய்துகொள்வது தமிழ் மொழியின் சொல் வளத்தைக் குறைத்து விடுமோ என்று வேதனைப்பட்டார். மெய்யன்றோ?

விற்பனைப் பெருக்கத்திலேயே குறியாக இருப்பதால் தமிழ் இதழ்கள். தமிழ்ச் சமுதாயத்தின் ஞானிகளாகவும் குரவர்களாகவும் இருந்து தொண்டாற்றும் கடமையினை மறந்து விடுவார்கள் என்று அஞ்சினார். காரிருளில் மின்னல் கீற்றுகளையும் காட்டினார் அடிகளார். கல் கண்டில் வரும் துப்பறியும் கதைகளில் நல்ல தமிழ்ப் பெயர்களைச் சூட்டுவதற்காக அதன் ஆசிரியர்-தமிழ் வாணனுக்குப் பாராட்டுக் கூறினார்.

‘கலைக்கதிர்’ திங்கள் இதழ், பலதுறை அறிவியலையும் துாய தமிழிலே தருவதிலே முன்னோடியாக இருந்து, தனி இடம் பெற்றுள்ளதை எடுத்துக்காட்டி மகிழ்ந்தார்.

‘கல்கண்டை’ உண்டு மகிழ்ந்தார்களாம் ஆராய்ச்சியாளர்கள். இவ்வார இதழில் பால் உணர்ச்சிக் கதையே கிடையாது; செய்தித் துணுக்குகள் ஏராளம். 1969ஆம் ஆண்டில் 5981 துணுக்களின் மூலம் அறிவினை வளர்த்தாராம் ‘கல்கண்டு’ ஆசிரியர். இவ்வகையில் படிப்போர்க்குப் பலதுறை அறிவு ஏற்படுகிறதாம். இத்தனை

உ. த.-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/104&oldid=481256" இலிருந்து மீள்விக்கப்பட்டது