பக்கம்:உலகத்தமிழ்.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

உலகத் தமிழ்


தகவல் துணுக்குகளில், அரசியல் பற்றி 568; இயற்கை மருத்துவம் பற்றி 586; பொது ஆலோசனை 327; பெண்களுக்கு அறிவுரை 344; சினிமா உலகம் பற்றி 1652 — இடம் பெற்றனவாம். திரு தமிழ்வாணன் அவர்களே, இப்படிக், கணக்கப் போட்டு பார்த்திருப்பாரோ என்னவோ?

இன்றைய மனிதனுக்கு அமைதியாக உட்கார்ந்து முழு சாப்பாடு உண்ண நேரமில்லை. இதில் கொஞ்சம் அதில் கொஞ்சம், விரைந்து விழுங்கிவிட்டு வேலையைப் பார்க்க, வேண்டியதாக இருக்கிறது. இதேபோல், பொறுமையாக, நீண்ட கட்டுரைகளைப் படித்து அறிந்து கொள்ளப் பலருக்கு நேரமில்லை. எனவே, பயனுள்ள சிறு சிறு தகவல்களின் மூலம் மக்களுக்கு அறிவூட் டுவதாகக் கல்கண்டு’ ஆசிரியர் கூறினாராம்.

ஆராய்ச்சி உரை மேலும் கூறுவது இதோ:

‘கல்கண்டு, முதல் எழுத்திலிருந்து கடைசி எழுத்து வரை திரு. தமிழ்வாணனுடையது. ஒருவரே அத்தனையும் எழுதி வருகிறார். எவ்வளவு காலமாக? இருபத்திரண்டு ஆண்டுகளாக, தனியொரு ஆசிரியரே வார இதழ் முழுவதையும் எழுதிடும் வியத்தகு புதுமை திரு. தமிழ்வாணனால் நிகழ்வதாகக் கூறிப் பூரித்தார். அவையைச் சுற்றிப் பார்த்தேன்; சுட்ட பழங்களையும் கண்டேன்.

தமிழ்வாணனின் இத்தகைய பெருமைக்கு, நான் கறுப்புப் பொட்டாக நேர்ந்து விட்டேன். குற்றவாளி நானல்லன். இது என் திட்டத்தின் விளைவன்று; நான் தேடியபெருமையன்று. இது திடீர் விளைவு, இதுவே என் வாழ்க்கை. யான் என்ன செய்வேன்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/105&oldid=481257" இலிருந்து மீள்விக்கப்பட்டது