பக்கம்:உலகத்தமிழ்.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இதழ்களின் தமிழ்ப் பணி

107


மூன்றாவது உலகத் தமிழ் மாநாடு சீரும் சிறப்புமாக முடிந்தது. சென்னையில், அனைத்து நாடுகளின் தமிழ் கல்விக் கழகத்தை அமைப்பதைப் பற்றிய திட்டத்திற்கு ஒப்புக் கொண்டு கலைந்தது.

நான்காவது உலகத் தமிழ் மாநாடு இலங்கையில் நடக்குமாம். அது 1973 இல் இருக்கலாம்.

மாநாடு முடிந்த அன்று இரவே, நான் பாரிசை விட்டுக் கிளம்பிவிட்டேன். அங்கிருந்து இலண்டன் சென்றேன். ஒரிரவு அங்குத் தங்கிவிட்டு, மறுநாள் பிற்பகல் அங்கிருந்து புறப்பட்டேன். மாஸ்கோ, டெல்லி பம்பாய் வழியாகத் திரும்பினேன்.

முடிப்பதற்கு முன் ஆசையொன்றை வெளியிட்டு விடுகிறேன்.

பாரிசு மாநாட்டிலிருந்து திரும்பி வந்த நான் மறுபடியும் கனடா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் ஒரு திங்கள் பயணஞ் செய்ய நேர்ந்தது. கடைசியாக, சிங்கப்பூரைப் பார்த்துவிட்டு மலேசியா விமான சர்விஸ் மூலம் சென்னைக்குப் புறப்பட்டேன். வானூர்தி மேலே கிளம்பியதும் சாப்பாட்டுப் பட்டியலைக் கொடுத்தார்கள். என்ன கண்டேன்? ‘தக்காளி ரசம்’, ‘பூரிக்கிழங்கு’ ‘சோறு’, ‘கோழிக்கறி’, ‘பாலாடை’ இப்படியாகத் தமிழ் உணவுகளைத் தமிழில் அச்சிட்டிருந்தார்கள். ஆங்கிலத்தில், மலேசியா மொழியில், அச்சிட்டதோடு தமிழிலும் அச்சிட்டிருந்தார்கள். கண்டு புளங்காங்கிதம் அடைந்தேன். இந்திய விமானங்களில், தமிழைக் காண இயலா விட்டாலும், மலேசியா-சிங்கப்பூர் விமானத்திலாகிலும் அதுஇடம் பெற்றுள்ளதே என் பூரிப்பு. மலேசியாவிலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/106&oldid=481258" இலிருந்து மீள்விக்கப்பட்டது